Airtel சூப்பர் ரீசார்ஜ் பிளான்.. 56 நாட்கள் வேலிடிட்டி.. 22 OTT சந்தா.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதேபோல் ஏர்டெல் பட்ஜெட் விலை திட்டங்களில் அதிக OTT சந்தா நன்மையை வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நன்மைகளை வழங்குகிறது. இப்போது இந்த ஏர்டெல் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.
அதாவது இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
குறிப்பாக ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். இதுபோன்று அதிக ஓடிடி மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என்றால் ரூ.1729 திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








