ஏர்டெல் யூஸ் பண்றீங்களா.. அமேசான் பிரைம்.. தினமும் 3ஜிபி டேட்டா.. இந்த ரெண்டு திட்டங்களை விட்றாதீங்க..
ஏர்டெல் நிறுவனத்தின் பயனர்கள் ஒரு மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை விட மூன்று மாதம் வேலிடிட்டி மற்றும் ஓடிடி நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிகம் ரீசார்ஜ் செய்கின்றனர். குறிப்பாக ஜியோ போன்றே ஏர்டெல் நிறுவனமும் பட்ஜெட் விலையில் ஓடிடி தரும் திட்டங்களை வழங்கி வருகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் வழங்கும் இரண்டு அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 838 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். குறிப்பாக இந்த பிரைம் மெம்பர்ஷிப் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 1199 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1199 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி தரும் திட்டங்களை தேர்வு செய்வதை விட அமேசான் பிரைம் சந்தா மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் இந்த ரூ.838 மறறும் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் கூடிய விரைவில் பல்வேறு அசத்தலான திட்டங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








