Home
News

சூப்பர் பிளான் பாஸ்.. Airtel யூசர்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5 ஜிபி டேட்டா!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்தின் கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கு மேலும், 3 மாதங்களுக்கு உள்ளாகவும் திட்டம் வேண்டினால், இந்த 77 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் போல புதிதாக வந்திருக்கும் ஸ்பேம் ஃபில்டர் சலுகையும் கிடைக்கிறது. முழு சலுகைகளையும் பார்த்துவிட்டு, ரீசார்ஜ் செய்யலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

டெலிகாம் கஸ்டமர்கள் 28 நாட்கள், 56 நாட்கள் அல்லது 84 நாட்கள் திட்டங்களை அதிகம் ரீசார்ஜ் செய்வார்கள். இதற்கு காரணம் இந்த வேலிடிட்டியிலே திட்டங்கள் இருக்கின்றன. ஆனால், கட்டண உயர்வுக்கு பிறகு 77 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களும் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இப்படி ஏர்டெல் நிறுவனத்தில் 2 திட்டங்களில் பக்கா சலுகைகள் கிடைக்கின்றன.

சூப்பர் பிளான் பாஸ்.. Airtel யூசர்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டி வருது!

ஏர்டெல் ரூ.799 திட்ட சலுகைகள் (Airtel Rs 799 Plan Offers): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 77 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகைகள் கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் சலுகையும், இந்த கால்களில் வரும் ஸ்பேம் அலெர்ட்டும் 2 மாதங்களுக்கு மேல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.

இந்த ரூ.799 திட்டத்தின் டேட்டா சலுகையை பார்க்கையில், 1.5 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. 1.5 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா கிடைக்கும். ஆனால், தடைபடாது. ஆகவே, டேட்டாவில் விலைக்கு ஏற்ப சலுகைகைகள் கிடைக்கின்றன. 100 எஸ்எம்எஸ்களை டேட்டாவை போல தினசரிக்கு வருகிறது.

அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் சலுகையும், இலவசமாக ஹலோ டியூன்கள் சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.799 திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஓடிடி சலுகைகள் கிடையாது. 77 நாட்கள் வேலிடிட்டிக்கு தினசரி டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்யுங்கள். இல்லை, வாய்ஸ் கால்கள் போதும் என்றால் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.

இந்த திட்டத்திலும் ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கின்றன. ஆனால், விலை மிகவும் கம்மியாக கிடைக்கிறது. இதற்கு சலுகையில் மாற்றங்களும் இருக்கின்றன. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு தெரிய வரும்.

ஏர்டெல் ரூ.489 திட்ட சலுகைகள் (Airtel Rs 489 Plan Offers): இந்த ஏர்டெல் 77 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல இருக்காது. லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படும். அதாவது, 77 நாட்களுக்கும் சேர்ந்து 6 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அதேபோல 600 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்படும்.

ஆனால், வாய்ஸ் கால்கள் சலுகை முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போல உங்களுக்கு கிடைக்கும். ஆகவே, எஸ்டிடி கால்கள், லோக்கல் கால்கள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் அன்லிமிடெட்டாக செய்து கொள்ள முடியும். மேலும், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் சலுகைகள் மற்றும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் சலுகையும் கிடைக்கும். ஸ்பேம் அலெர்ட் சலுகையும் உண்டு.

இப்படி 77 நாட்கள் வேலிடிட்டியில் டேட்டாவுக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டமும், வாய்ஸ் கால்களுக்கு மற்றொரு திட்டமும் உங்களுக்கு கிடைக்கிறது. இதில் எது உங்களது பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப இருக்கிறதோ அதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். 2 மாதங்களுக்கு உங்களுக்கு வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இதுபோன்ற செய்திகளுக்கு பின்தொடருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 799 Plan Offers 77 Days Validity 115GB Data Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X