ஒரே Airtel ரீசார்ஜ்.. இனி 77 நாட்களுக்கு வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. தினமும் 1.5 ஜிபி டேட்டா!
ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தை தேடிக்கொண்டிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்துவிடுங்கள். 77 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எஎம்எஸ் மட்டுமல்லாமல் கூடுதல் சலுகையும் கிடைக்கும்.
டெலிகாம் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி, 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களே அதிகமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ஆனால், ஏர்டெல் நிறுவனம் 77 நாட்களுக்கு வேலிடிட்டி (77 Days Validity) கொடுக்கும்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) வைத்துள்ளது.

ஏர்டெல் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Rs 799 Plan Details): 77 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்காது.
ஏனென்றால், இந்த திட்டத்தின் விலை மலிவாக இருக்கிறது. 77 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local, STD & Roaming Voice Calls) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் (SIM Active) தொடர்ந்து கிடைக்கிறது.
மேலும், 77 நாட்களில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த மூன்று சலுகைகளும் போக கூடுதலாக நான்கு சலுகைகளை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் சலுகைகளாகவும் இவை இருக்கின்றன.
ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இன்கம்மிங் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் இருந்தால் அதை ரியல் டைமில் அலெர்ட் செய்து கொள்ளலாம். மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இதில் 30 நாட்களுக்கு ஒரு டியூனை மாற்றி கொள்ள முடியும்.
ஆகவே, 77 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 2 டியூனை வைத்து கொள்ளலாம். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த ஒரே சந்தா வழியாக ஏகப்பட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் சோனிலிவ் (Sony LIV) ப்ரீ வெர்ஷன் சந்தா கொடுக்கப்படும்.
மேலும், அமோசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player), வ்ரோட் (Vrott), சன்னா ஜோர் (Chana Jor), ரன்ன் டிவி (Runn TV) மற்றும் டிஸ்ட்ரோ டிவி (Distro TV) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதுபோக பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவும் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இதை 12 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.
ஒருவேளை 5ஜி டேட்டா சலுகை வேண்டுமானால், ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் வேலிடிட்டி மட்டும் குறைவாக இருக்கும். ஆனால், டேட்டா, ஓடிடி சலுகைகள் கூடுதலாக இருக்கும். அதேபோல தினசரி டேட்டாவும் கூடுதலாக கிடைக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தின் தினமும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா கிடைக்கும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








