Home
News

Airtel அடிச்சான் பாரு.. 77 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!

ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட திட்டம் கம்மியான விலைக்கு வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். டேட்டா, எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் போக கூடுதல் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.

2 மாதங்களுக்கு மேல் 17 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழக்கம்போல கிடைக்கும். மேலும், ஹலோ டியூன்ஸ், ஸ்பேம் அலெர்ட், அடோப் பிரீமியம் போன்ற கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளன. அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்காது.

Airtel அடிச்சான் பாரு.. 77 நாட்களுக்கு ஒரே ரீசார்ஜ்.. எந்த திட்டம்?

ஏர்டெல் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Rs 799 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா (1.5GB Data) மற்றும் அந்த டேட்டா முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கொடுக்கப்படும். மொத்தமாக 115.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படவில்லை என்றாலும், இந்த விலைக்கு 77 நாட்கள் வேலிட்டியை கொடுத்துள்ளது. மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்தில் அனுப்பி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் வழக்கமாக திட்டத்துக்கு கிடைக்கின்றன. இப்போது, கூடுதல் சலுகைகளுக்கு வருவோம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு 77 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், இதை 12 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம்.

மேலும், ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு வரும் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம் இருந்தால், அதை கண்டுபிடிக்க லைவ் ஸ்பேம் அலெர்ட் (Live Spam Alert) சலுகை கிடைத்துள்ளது. இந்த சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொண்ட திட்டம் வேண்டுமானால், ஓடிடி சந்தாவுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் கூடுதல் வேலிடிட்டி, டேட்டா மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். இதற்கு ஏற்ப விலையும் கூடுதலாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 979 திட்ட விவரங்கள் (Airtel Rs 979 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

முந்தை திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல, ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகைகள் கிடைக்கிறது. மேலும், 12 மாதங்களுக்கு பயன்படுத்தும்படி அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் கொடுக்கப்பட்டு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 799 Plan 77 Days Validity 1.5GB Data Unlimited Local STD 12 Months Adobe Express Premium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X