Home
News

ஏர்டெல் போட்ட போடு.. ரூ.798-க்கு 2 ஜிபி டேட்டா.. இனிமே 189 நாடுகளுக்கு 150 நிமிடங்கள் வாய்ஸ்.. 20 எஸ்எம்எஸ்!

இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்களில் (International Roaming Plan) பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் கஸ்டமர்களை மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஐஆர் திட்டத்தை தொடர்ந்து இப்போது, அதைவிட மலிவான விலைக்கு மற்றொரு திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த ஐஆர் திட்டம் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் கிடைக்கிறது.

பார்தி ஏர்டெல் நிறுவனம், இந்திய மட்டுமல்லாமல் 18 நாடுகளில் டெலிகாம் சேவைகளை கொடுக்கிறது. இந்த நாடுகள் உள்பட 189 நாடுகளில் இன்டர்நேஷனல் ரோமிங் சேவையும் கொடுக்கிறது. இதனால், இந்தியாவை சேர்ந்த ஏர்டெல் கஸ்டமர்கள் மற்றும் என்ஆர்ஐகளுக்கும் (NRIs) பயன்படும்படி இன்டர்நேஷ்னல் ரோமிங் திட்டங்கள் கிடைக்கின்றன.

ஏர்டெல் போட்ட போடு.. ரூ.798-க்கு 2 ஜிபி டேட்டா.. இனிமே 189 நாடுகளில்!

இப்போது ரூ 798 மதிப்பிலான ஐஆர் திட்டத்தை (IR Plan) கொடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 189 நாடுகளுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதேபோல டேட்டா சேவையும் இந்த ஐஆர் திட்டத்தில் வருகிறது. ஒருவேளை நீங்கள் இன்டர்நேஷனல் டிராவலராக இருந்தால், ரோமிங் சலுகையும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 789 திட்ட விவரங்கள் (Airtel Rs 798 Plan Details): இந்த ஏர்டெல் ஐஆர் திட்டம் ப்ரீபெய்ட் (Prepaid) கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 5 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் யுஎஸ்ஏ (USA), ஐரோப்பா (Europe), ஆசியா (Asia) மற்றும் ஆப்ரிக்காவில் (Africa) இருக்கும் நாடுகளுக்கு சேவைகள் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக 189 நாடுகளுக்கு சேவைகள் கிடைக்கிறது. 2 ஜிபி டேட்டா மற்றும் 150 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. இதில் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் அடங்கும். அதேபோல இந்தியா மற்றும் லோக்கல் கால்களும் அடங்கும். மேலும், 20 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. போஸ்ட் சார்ஜ்கள் இருக்கின்றன.

ஆகவே, திட்டத்தின் சலுகைகள் முடிந்த பிறகு 1 நிமிடத்துக்கு ரூ.10 மற்றும் ஒரு எஸ்எம்எஸ் செய்ய ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த திட்டத்தை பெற்ற கஸ்டமர்கள் வெளிநாடுகளுக்கு சென்றவுடனேயே இன்டர்நேஷனல் ரோமிங் பேக் ஆக்டிவேட் செய்யப்படும். இப்படியான சலுகைகளை இந்த புதிய ஏர்டெல் ஐஆர் திட்டம் கொடுக்கிறது.

ஒருவேளை உங்களுக்கு இந்தியாவிலும் பயன்படுத்தும்படி திட்டம் வேண்டுமானால், இதற்கு முன்னதாக அறிமுகமான புதிய ஐஆர் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இது கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப சலுகைகளை கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தின் விலை ரூ.4000ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது.

இந்த நாட்களில் வெளிநாடுகளுக்கான சலுகைகளை பார்க்கையில் 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இன்கம்மிங் + அவுட்கோயிங் கால்களுடன் 100 நிமிடங்களுக்கு வாய்ஸ் கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. அதுவே இந்தியாவில் வழக்கமாக கிடைக்கும் வருடாந்திர திட்டத்தில் (Yearly Plan) கிடைப்பதை போலவே அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன.

ஆகவே, ஐஆர் சலுகைகள் அல்லாமல், இந்தியாவில் மட்டும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் கால்கள் (National Roaming Calls) கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1.5 ஜிபி டேட்டா சலுகையை இந்த ஐஆர் திட்டம் கிடைக்கிறது. ஆகவே, டூ-இன்-ஒன் திட்டமாக இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 798 Plan 2GB Data 150 Minutes Voice 5 Days Validity Check IR Plan For Prepaid Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X