ஒன்னுதானா? ஏர்டெல்லின் 90 ஸ்கெட்ச்.. மூன்று மாதங்களில் ஒரே திட்டம்.. மாதம் ரூ.259 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மாதம் ரூ.259 செலவில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் மற்றும் 1.5 ஜிபி தினசரி டேட்டா சலுகைகளுடன் 90 நாட்கள் வேலிடிட்டியோடு கிடைக்கும் ஒரேவொரு திட்டத்தை பற்றி பார்க்கப்போகிறோம். இதுகுறித்த விவரம் இதோ.
ஏர்டெல் ரூ 779 திட்ட விவரங்கள் (Airtel Rs 779 Plan Details): ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரே திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, மொத்தமாக 135 ஜிபி டேட்டாவானது, கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த 1.5 ஜிபி டேட்டாவை முழுமையாக பயன்படுத்தி பிறகு, 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
முதலில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா திட்டத்தின் டேட்டாவில் இருந்து குறைக்கப்படாது. அதேபோல 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சலுகையை பெறலாம்.
மேலும், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music) சலுகை கொடுக்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு நல்ல சலுகைகளை கொண்ட திட்டம் வேண்டுமானால், ஏர்டெல் கஸ்டமர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இதே சலுகைகளுடன் ஓடிடி சந்தா வேண்டுமானால், ரூ 869 விலையில் கிடைக்கும் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.
ஏர்டெல் ரூ 869 திட்ட விவரங்கள் (Airtel Rs 869 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. இருப்பினும், முந்தைய திட்டத்தை விட கூடுதலாக பல்வேறு சலுகைகளை கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.
ஆகவே, மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேக அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதே போல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சந்தா மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் சலுகை கொடுக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ரிவார்ட்ஸ்மினி சந்தா (RewardsMini Subscription) வழங்கப்படுகிறது. இவ்வளவு சலுகைகள் போல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டா சலுகையோடு ஓடிடி சந்தா விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








