Home
News

பிச்சிக்கும் ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.259 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

மாதத்துக்கு வெறும் ரூ.259 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், 135ஜிபி டேட்டா போன்ற சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. 30, 60 மற்றும் 90 நாட்கள் வேலிடிட்டியில் மொத்தம் 5 திட்டங்கள் வருகின்றன.

ஏர்டெல் ரூ 779 திட்ட விவரங்கள் (Airtel Rs 779 Plan Details): ஏர்டெல்லில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரே திட்டம் இதுவாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.

பிச்சிக்கும் ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.259 போதும்.. 90 நாட்கள் சலுகை!

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த 1.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவையை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் வருகிறது.

ஆகவே, 135 ஜிபி டேட்டா மற்றும் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகள் வருகின்றன. இதுபோக கூடுதல் சலுகைகள் இருக்கின்றன.

அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle) சந்தா 3 மாதங்களுக்கு கொடுக்கப்படும். அதேபோல ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளை ஏர்டெல் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது, 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 519 திட்ட விவரங்கள் (Airtel Rs 519 Plan Details): 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரே திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் மற்றும் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா கிடைக்கிறது. மேலும் ப்ரீ-ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகளை பெறலாம். அன்லிமிடெட் 5ஜி சலுகையும் கிடைக்கிறது. 30 நாட்கள் திட்டங்கள் பின்வருமாறு.

ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 3 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இது தினசரி டேட்டா கிடையாது. ரூ.5 டாக்டைம் வருகிறது. அன்லிமிடெட் கால்களை செய்துகொள்ளலாம். ப்ரீ-ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ 296 திட்ட விவரங்கள் (Airtel Rs 296 Plan Details): இந்த திட்டத்திலும் 25 ஜிபி டேட்டா மொத்தமாக கொடுக்கப்படுகிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் வருகிறது. வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா, ப்ரீ-ஹலோ டியூன்ஸ் வருகிறது.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 50 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வருகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தின் மற்ற சலுகைகள் இதற்கும் பொருந்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 779 Plan Offers 90 Days Validity, Unlimited Voice Calls, 135GB Data Check 3 Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X