கேபிள் TV-க்கு போட்டான் பாரு .. 350+ டிவி சேனல்கள்.. 100எம்பிபிஎஸ் ஸ்பீடு.. 22+ ஓடிடி சந்தா.. ரூ.699 போதும்!
கேபிள் டிவிக்கு நிகரான லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா மற்றும் 22+ ஓடிடி ஆப்களின் சந்தாவை ஏர்டெல் நிறுவனமானது, ரூ.699 திட்டத்தில் கொடுத்து இருக்கிறது. இந்த ஏர்டெல் வை-பை திட்டத்தின் (Airtel Wi-Fi Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் வை-பை திட்டங்களில் லைவ் டிவி சேனல்களும் கொடுக்கப்படுகின்றன. எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் (Xstream Box) வழியாக இந்த டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதில் ஆரம்ப விலையில் லைவ் டிவி சேனல்களை கொடுக்கும் வை-பை திட்டமாக ரூ.699 திட்டம் இருக்கிறது. ரூ.499 முதல் வை-பை திட்டம் கிடைத்தாலும், டிவி சேனல்களானது, ரூ.699 முதல் தொடங்குகிறது.

ஏர்டெல் ரூ.699 வை-பை திட்டம் (Airtel Rs 699 Wi-Fi Plan): இந்த வை-பை திட்டம் அதிகமாக பெறப்படும் திட்டமாக இருக்கிறது. 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை கொடுத்து இருக்கிறது. பிராட்பேணட் கனெக்டிவிட்டியில் கொடுக்கப்படுவதால், அன்லிமிடெட் லோக்கல்/எஸ்டிடி கால்கள் (Unlimited local/STD Calls) கொடுக்கப்படுகிறது.
கூகுள் ஒன் (Google One) வழியாக 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவையும் இந்த ஏர்டெல் ரூ.699 வை-பை திட்டம் கொடுத்து இருக்கிறது. ஓடிடி ஆப்களை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium) ஆகிய சந்தா கிடைக்கிறது.
மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவை (Airtel Xstream Play Subscription) இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இதிலும் சோனிவில், சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட 20+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இந்த ஓடிடி ஆப்களுக்கு அடுத்து 350+ லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படும். இவற்றை எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் வழியாக பார்த்து கொள்ளலாம்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீடிவி, பிபிசி நியூஸ், சோனி சேனல்கள் உள்ளிட்ட 350+ லைவ் டிவி சேனல்கள் இதில் கிடைக்கும். இந்த டேட்டா வேகம் மற்றும் ஓடிடி சந்தா போதாது என்றால், ரூ.1,199 விலைக்கு கிடைக்கும், ஏர்டெல் வை-பை திட்டத்துக்கு செல்லலாம். இதில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட பிரீமியம் ஓடிடி ஆப்களுடன் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.1,199 வை-பை திட்டம் (Airtel Rs 1,199 Wi-Fi Plan): இந்த வை-பை திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படும். அன்லிமிடெல் லோக்கல்/எஸ்டிடி கால்களும் கிடைக்கும். இதுபோக நெட்பிளிக்ஸ் (Netflix), ஆப்பிள் டிவி (Apple TV), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜீ5 (Z5) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஆப்கள் கிடைக்கும்.
இந்த ஓடிடிகள் போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா வழியாக 20+ ஓடிடி ஆப்கள் கொடுக்கப்படும். மற்ற சலுகைகளில் பெரிய மாற்றங்கள் கிடையாது. 350+ லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டங்களை முதல்முறை பெறும்போது, கூடுதல் கட்டணங்கள் இருக்கும். அதேபோல ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டியுடன் இந்த திட்டங்களை பெற வேண்டும்.
ஏர்டெல் நிறுவனத்தின் இணைய தளம் அல்லது மொபைல் ஆப் வழியாக இந்த திட்டங்களை பெற்று கொள்ளலாம். ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு உடனடியாக இந்த வை-பை திட்டங்கள் கொடுக்கப்படும். இன்ஸ்டாலேஷன் உள்ளிட்ட தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications