கேபிள் TV-க்கு ஒரே போடு.. வெறும் ரூ.699-க்கு டிவி சேனல்கள்.. 12 ஓடிடி.. 40 எம்பிபிஎஸ் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
கேபிள் டிவியில் லைவ் டிவி சேனல்கள் மட்டுமே கிடைக்கும், ஆனால் ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா, 12 ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற சலுகைகளை வெறும் ரூ.699 விலைக்கு கொடுக்கிறது. உங்களிடம் ரூ.1000 இருந்தால் போதும் ஏர்டெல் பிளாக் திட்டங்களில் (Airtel Black Plan) 2 ஆப்ஷன்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிளாக் திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 699 திட்டம் (Airtel Rs 699 Plan) மற்றும் ஏர்டெல் ரூ 899 திட்டம் (Airtel Rs 899 Plan) ஆகிய 2 பிளாக் திட்டங்கள் ரூ.1000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. இதில் பிராட்பேண்ட் டேட்டா வேகம் மட்டுமே விலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. மற்றபடி வாய்ஸ் கால்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா ஆகிய சலுகைகள் ஒரே மாரிதியாகவே இருக்கின்றன.

ஏர்டெல் ரூ 699 திட்ட விவரங்கள்: இந்த பிளாக் திட்டத்தில் ஃபைபர் டேட்டா மற்றும் லேண்ட்லைன் சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், லேண்ட்லைன் டிவைஸ் உங்களிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி கால்களை (STD Calls) செய்து கொள்ள முடியும். 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும்.
இதற்கு அடுத்து டிடிஎச் மூலம் ரூ.350 மதிப்பிலான லைவ் டிவி சேனல்களின் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. மேலும், டிஸ்னிபிளஸ் ஹாஸ்டார் (Disney + Hotstar) சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சந்தா மட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel XStream App) மூலம் 12 ஓடிடி ஆப்களை பயன்படுத்தும்படியான சலுகை ஏர்டெல் கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
இந்த பட்டியலில் சோனிலிவ் (SonyLiv), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), நம்மபிளிக்ஸ் (Nammaflix), டிவோ (Divo), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஷீமரூமீ (Shemaroome), க்ளிக் (Klikk), ஹங்கமா பிளே (HungamaPlay) மற்றும் அல்ட்ரா (Ultra) போன்ற ஆப்கள் அடங்கும். இந்த 40 எம்பிபிஎஸ் டேட்டா போதாது கூடுதல் வேகம் வேண்டும் என்றால் அடுத்த திட்டம் சரியாக இருக்கும்.
ஏர்டெல் ரூ 899 திட்ட விவரங்கள்: இந்த ஏர்டெல் பிளாக் திட்டமும் கிட்டத்தட்ட முந்தைய திட்டத்தை போலவே சலுகைகளை வைத்திருக்கின்றன. ஆனால், டேட்டா வேகம் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, இந்த பிளாக் திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா கிடைக்கிறது. லேண்ட்லைன் சலுகை மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது.
முந்தைய திட்டத்தில் பார்த்த ரூ.350 மதிப்பிலான லைவ் டிவி சேனல்களின் சலுகையை இதிலும் பெற்று கொள்ளலாம். அதேபோல டிஸ்னிபிளஸ் ஹாஸ்டார் சந்தாவும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவும் இதில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ், ஈராஸ்நவ், மனோரமா மேக்ஸ், நம்மபிளிக்ஸ், லையன்ஸ்கேட்பிளே, டிவோ மற்றும் ஷீமரூமி ஆப்களை பயன்படுத்தலாம்,
மேலும், க்ளிக், ஹங்கமா பிளே, அல்ட்ரா ஆப்களும் கிடைக்கின்றன. இந்த திட்டங்களுக்கு மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கிறது. ஏற்கனவே, பிளாக் திட்டங்களை பயன்படுத்தி வரும் கஸ்டமர்களுக்கு இந்த விலை பொருந்தும். புதிதாக பெறும் கஸ்டமர்களுக்கு இன்ஸ்டாலேஷன், 6 மாத வேலிடிட்டியை தேர்வு செய்தல் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும்.


Click it and Unblock the Notifications








