புது IPTV சேவை.. இனி கேபிள் TV அம்பேல்.. 350 லைவ் டிவி சேனல்கள்.. 26 ஓடிடி சந்தா.. 40எம்பிபிஎஸ் Wi-Fi டேட்டா!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் மட்டுமல்லாமல் கேபிள் டிவி (Cable TV) சேவையை பயன்படுத்தும் கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி ஏர்டெல் ஐபிடிவி (Airtel IPTV) சேவைகள் கிடைக்கின்றன. அதேபோல அடிமட்ட விலையில் வை-பை டேட்டா (Wi-Fi Data) மற்றும் வை-பை + லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) + ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இப்படி மூன்று அடிமட்ட விலை திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 499 வை-பை திட்டம் (Airtel Rs 499 Wi-Fi Plan): இந்த வை-பை திட்டமானது, பேசிக் சலுகைகளை கொடுக்கிறது. ஆரம்ப விலையில் கிடைப்பதால் வை-பை டேட்டா மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவானது வை-பை ரூட்டர் மூலம் கிடைக்கும்.

இந்த திட்டத்தை முதலில் பெறும் கஸ்டமர்கள் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தி பெற்று கொள்ளலாம். இப்படி செய்தால், வை-பை ரூட்டர் இலவசமாக கொடுக்கப்படும். அதேபோல இலவசமாக இன்ஸ்டாலேஷன் செய்து கொடுக்கப்படும். இந்த சலுகைகளை தவிர வேறு எந்த சலுகைகளையும் இந்த வை-பை திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே, ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்களுடன் வை-பை திட்டம் வேண்டுமானால், ரூ 599 மதிப்பிலான திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் வை-பை டேட்டா மட்டுல்லாமல், ஓடிடி ஆப்களும், லைவ் டிவி சேனல்களும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை பெறுவதற்கும் அட்வான்ஸ் முறையில் பணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 599 வை-பை திட்டம் (Airtel Rs 599 Wi-Fi Plan): இந்த வை-பை திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படும். இதுபோக 350+ லைவ் டிவி சேனல்கள் மற்றும் 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும். இதற்காக ஆண்ட்ராய்டு பாக்ஸ் கிடைக்கிறது. ஆகவே, வை-பை ரூட்டருடன் இந்த ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஓடிடி ஆப்களை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஜீ5 (ZEE5), சோனி லிவ் (Sony LIV), அல்ட்ரா (Ultra), ஈராஸ்நவ் (ErosNow), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), ஹோய்சோய் (Hoichoi), ஆல்ட் பாலாஜி (Alt Balaji), சாவ்பால் (Chaupal), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), ஆஹா (Aha), டாலிவுட் பிளே (Dollywood Play) வருகிறது.
மேலும், மனோரமா மேக்ஸ் (ManoramaMax), பேன்கோட் (FanCode), நம்ம பிளிக்ஸ் (Namma Flix),ஷீமாரூமீ (ShemarooMe), ஸ்டேஜ் (Stage), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), எபிக் ஆன் (EPICon), டாகுபே (Docubay), பிளேபிளிக்ஸ் (Playflix), கே டிராமா (K-Drama), கான்ச்சா லங்கா (Kanccha Lannka) மற்றும் ராஜ் டிஜிட்டல் (Raj Digital) ஆகிய ஆப்களின் சலுகைகளும் இந்த வை-பை திட்டத்தில் கிடைக்கின்றன.
இந்த திட்டத்தில் ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் டிவி சேனல்களையும் பார்த்து கொள்ளலாம். இந்த டிவைஸ்கள் மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக பெற்று கொள்ள வேண்டுமானால், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான தொகையை அட்வான்ஸ் முறையில் செலுத்தினால் போதும் பெற்று கொள்ளலாம். இல்லையென்றால், திட்டத்தின் விலையுடன் கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.
ஏர்டெல் ரூ 699 ஐபிடிவி திட்டம் (Airtel Rs 699 IPTV Plan): ஐபிடிவி திட்டங்களில் இது ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. இருப்பினும், வை-பை டேட்டா (Wi-Fi Data), லைவ் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள் (OTT Apps) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆனால், இந்த ஏர்டெல் ஐபிடிவி சேவையானது அனைத்து நகரங்களிலும் கிடைக்காது.
முக்கியமான 2000 நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதை பெறுவதற்கு முன்பு உங்களது பகுதியில் இந்த சேவை கிடைக்கிறதா என்பதை விசாரித்து கொள்ளுங்கள். சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. மற்ற நகரங்களில் கூடிய விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. சரி இப்போது இந்த திட்டத்தின் சலுகைகளுக்கு வருவோம்.
இந்த திட்டம் ஏர்டெல் பிளாக் திட்டங்களின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, ஏர்டெல் வைப்சைட்டில் ஏர்டெல் பிளாக் திட்டங்களுக்கு சென்று கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தை பெற்ற பிறகு 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளாலாம்.
இந்த சலுகைகள் போக 350+ லைவ் டிவி சேனல்களின் சலுகை கிடைக்கிறது. இந்த சேனல்களை இன்டர்நெட் மூலம் பார்த்து கொள்ள முடியும். ஆகவே, டேட்டா மட்டுமே இருந்தால் போதும், வேறு எந்த கனெக்டிவிட்டியும் இல்லாமலேயே டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இந்த டிவி சேனல்களில் எச்டி சேனல்களும் (HD Channels) கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.
இதுபோக வழக்கமான ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் 26+ ஓடிடி ஆப்களை கஸ்டமர்கள் பெற முடியும். இது முந்தைய திட்டத்தில் பார்த்த அதே ஓடிடி ஆப்களாகவே இருக்கின்றன. ஆகவே, சன்நெக்ஸ்ட், சோனி லிவ், பேன்கோட், மனோரமா மேக்ஸ், ஷீமாரூமீ, ஆல்ட் பாலாஜி, அல்ட்ரா, ஈராஸ்நவ், லயன்ஸ்கேட்ஸ் பிளே, சாவ்பால், ஹோய்சோய் மற்றும் எபிக் ஆன் ஆப்கள் கிடைக்கின்றன.
மேலும், டாகுபே, பிளேபிளிக்ஸ், கே டிராமா, ஆஹா, ஸ்டேஜ், கான்ச்சா லங்கா மற்றும் நம்ம பிளிக்ஸ், ஹங்கமா, கிளிக், ராஜ் டிஜிட்டல், ஷார்ட்ஸ் டிவி மற்றும் டாலிவுட் பிளே ஆப்களும் வருகின்றன. இந்த மூன்று திட்டங்கள் மட்டுமே அடிமட்ட விலைக்கு கிடைக்கும் வை-பை மற்றும் ஐபிடிவி திட்டங்களாக இருக்கின்றன. இதில் ஐபிடிவி திட்டங்களுக்கு கூடுதல் சலுகை இருக்கிறது.
அதாவது, இந்த ஐபிடிவி திட்டங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதால், அதை பெறும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் இலவச சேவை கொடுக்கப்படுகிறது. இதில் டேட்டா, வாய்ஸ் கால்கள், லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களும் அடங்கும். இந்த திட்டங்களுக்கு ஜிஎஸ்டி கட்டணங்கள் வசூலிக்கப்படலாம். ஏர்டெல் வைப்சைட்டில் செக் செய்து கொள்ளுங்கள். கேபிள் டிவிக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications