கேபிள் TV, DTH கதை முடிந்தது.. இனிமே IPTV-தான்.. உடனே இதை பண்ணுங்க.. 350+ டிவி சேனல்கள்.. 30 நாட்கள் இலவசம்!
கேபிள் டிவி, டிடிஎச் இல்லாமலேயே நேரடியாக இன்டர்நெட் மூலம் லைவ் டிவி சேனல்கள் கொடுக்கும்படியா ஐபிடிவி (IPTV) சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம் களமிறங்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் 2,000 நகரங்களில் இந்த ஏர்டெல் ஐபிடிவி (Airtel IPTV) சேவைகள் கிடைக்கின்றன. அறிமுக சலுகையில் 30 நாட்களுக்கு இலவமாக சேவை வழங்கப்படுவதால், ஏர்டெல் கஸ்டமர்கள் குஷியாகிவிட்டனர். இந்த ஐபிடிவி சேவையை எப்படி பெறுவது? பழைய கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் சேவை கிடைக்குமா? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஐபிடிவிகளுக்குகாக பிரத்யேக திட்டங்கள் இல்லை. ஏற்கனவே, கிடைத்துவரும் வை-பை திட்டங்களில் கூடுதலாக இந்த ஐபிடிவி சேவை இணைக்கப்பட்டுள்ளது. இந்த வை-பை திட்டங்களில் 29 ஓடிடி ஆப்கள், 350+ டிவி சேனல்கள் மட்டுமமல்லாமல், வை-பை டேட்டாவும் கிடைக்கிறது. இந்த திட்டங்களை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) அல்லது ஏர்டெல் வெப்சைட் மூலம் பெறலாம்.

இதுபோக அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோர்களிலும் பெற்று கொள்ளலாம். புதிய கஸ்டமர்கள் ரூ.699 மதிப்பிலான வை-பை திட்டத்தை பெறுவதன் மூலம் இந்த ஐபிடிவி சேவை கொடுக்கப்பட இருக்கிறது. பழைய கஸ்டமர்கள் ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் 30 நாட்களுக்கு இலவச ஐபிடிவி சேவையை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ 699 மதிப்பிலான திட்டத்தை பற்றி பார்ப்போம்.
ஏர்டெல் ரூ 699 ஐபிடிவி திட்ட விவரங்கள் (Airtel Rs 699 IPTV Plan Details): ஏர்டெல் பிளாக் திட்டங்களில் (Airtel Black Plan) இது கிடைக்கிறது. இது ஆரம்ப விலை திட்டமாகும். ரூ.3,999 வரையில் திட்டங்கள் இருக்கின்றன. இவை டேட்டா வேகம் மற்றும் ஓடிடி ஆப்கள் அடிப்படையில் கிடைக்கின்றன. ஆகவே, இந்த ரூ.699 திட்டத்தில் பேசிக் சலுகைகள் மட்டுமே கிடைக்கும்.
இருப்பினும், 350+ டிவி சேனல்கள் அனைத்து திட்டங்களுக்கும் பொதுவாக கிடைப்பதால், ஐபிடிவி சேவைக்கு இந்த திட்டம் பக்காவாக இருக்கும். இந்த திட்டத்தை ஏர்டெல் தேங்க்ஸ் ஆப், ஏர்டெல் வெப்சைட் அல்லது ஏர்டெல் ஸ்டோர்கள் மூலம் பெற்ற பிறகு உங்களுக்கு 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா (Wi-Fi Data) கிடைக்கும். இதை மல்டிபிள் டிவைஸ்களில் பயன்படுத்தலாம்.
அதேபோல லேண்ட்லைன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஆனால், லேண்ட்லைன் டிவைஸ்களை ஏற்கனவே ஏர்டெல் கஸ்டமர்கள் வைத்திருக்க வேண்டும். இந்த டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் போக 26 ஓடிடி ஆப்களும், 350+ லைவ் டிவி சேனல்களும் (Live TV Channel) கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel XStream App) வருகிறது.
இந்த ஆப் மூலமே 26 ஓடிடி ஆப்களை அணுக முடிகிறது. இந்த ஆப்களில் சன்நெக்ஸ்ட் (Sun NXT), சோனி லிவ் (Sony LIV), பேன்கோட் (FanCode), மனோரமா மேக்ஸ் (ManoramaMax), ஷீமாரூமீ (ShemarooMe), ஆல்ட் பாலாஜி (Alt Balaji), அல்ட்ரா (Ultra), ஈராஸ்நவ் (ErosNow), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgate Play), சாவ்பால் (Chaupal) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) போன்ற ஆப்கள் கிடைக்கின்றன.
அதே நேரத்தில் எபிக் ஆன் (EPICon), டாகுபே (Docubay), பிளேபிளிக்ஸ் (Playflix), கே டிராமா (K-Drama), ஆஹா (Aha), ஸ்டேஜ் (Stage), கான்ச்சா லங்கா (Kanccha Lannka), நம்ம பிளிக்ஸ் (Namma Flix), ஹங்கமா (Hungama), கிளிக் (Klikk), ராஜ் டிஜிட்டல் (Raj Digital), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV) மற்றும் டாலிவுட் பிளே (Dollywood Play) ஆகிய ஆப்களும் வருகின்றன. இந்த திட்டத்தில் ஐபிடிவி சேவையும் வருகிறது.
ஆகவே, கேபிள் அல்லது செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே இன்டர்நெட் மூலம் இந்த டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஓடிடி ஆப்களை போலவே இந்த சேவையும் வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. ஆனால், அவை ரூ.1099 திட்டத்தில் இருந்து கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








