Home
News

இனி கேபிள் TV எதுக்கு? மாதத்திற்கு 3300GB டேட்டா, IPTV சேனல்கள், 22 OTT.. Airtel-ன் சூப்பர் ஹிட் பிளான்!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் இந்த திட்டத்தை "கேபிள் டிவி கட்டர் பிளான்" என்று கூறப்படுவதற்கும், "சூப்பர் ஹிட் பிளான்" என்று பேசப்படுவதற்கும் - சரியான, தரமான காரணங்கள் உள்ளன. அது என்ன காரணங்கள்? என்ன திட்டம்? என்ன விலை? இதோ விவரங்கள்:

ஆஸ்தான மாதாந்திர ரீசார்ஜ்: ஏர்டெல் நிறுவனமானது இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டாவது மிகப்பெரிய ஃபிக்ஸட் பிராட்பேண்ட் வழங்குநராக உள்ளது. இதன் கீழ் மிகவும் விரும்பப்படும் ஒரு பிராட்பேண்ட் திட்டம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையின் கீழ் உள்ள பல வாடிக்கையாளர்களுக்கும் இதுதான் "ஆஸ்தான மாதாந்திர ரீசார்ஜ்" ஆக உள்ளது. ஆகையால் தான் இது - சூப்பர் ஹிட் பிளான்!

3300GB டேட்டா, IPTV சேனல்கள், 22 OTT.. Airtel-ன் சூப்பர் ஹிட் பிளான்!

அது என்ன திட்டம்? நாம் பேசும் திட்டம், ஏர்டெல்லின் ஏர்ஃபைபர் சேவை மற்றும் ஃபைபர் சேவை ஆகிய இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மாத கட்டணம் ரூ.699 ஆகும். இறுதி பில்லிங்கின் போது கூடுதலாக ஜிஎஸ்டி (GST) விதிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ஏர்டெல்லின் ரூ.699 பிராட்பேண்ட் திட்டமானது, பெரும்பாலான வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம் - இதன் விலை நிர்ணயம். இது பெரும்பாலான பயனர்களின் விலை வரம்பில் இருக்கிறது, அதோடு ரூ.699-ன் கீழ் பல வகையான ஓடிடி (ஓவர் தி டாப்) நன்மைகளும் கிடைக்கிறது.

ரூ.699 பார்தி ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்தி ஏர்டெல்லின் ரூ.699 பிராட்பேண்ட் திட்டமானது 40எம்பிபிஎஸ் (40 Mbps) ஸ்பீட் உடன் வருகிறது. இது மிக அதிவேகமான திட்டம் இல்லை, ஆனால் இதில் போதுமான டேட்டா உள்ளது.

டேட்டா நன்மை: ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 1 டிபி (1000 ஜிபி) டேட்டாவும், ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 3.3 டிபி (3300 ஜிபி) டேட்டாவும் கிடைக்கும். உங்கள் பகுதியில் ஃபைபர் கனெக்ஷன் இருந்தால், ஏர்ஃபைபர் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று ஏர்டெல் நிறுவனமே கூறுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐபிடிவி நன்மை: ரூ.699 திட்டத்தின் மூலம் ஏர்டெல் நிறுவனம் ஆனது ஐபிடிவி (IPTV) என்கிற இன்டர்நெட் புரோட்டோகால் டிவி (Internet protocol TV) சேவைகளையும் வழங்குகிறது. அறியாதோர்களுக்கு ஏர்டெல்லின் ஐபிடிவி நன்மையானது, நுகர்வோர்கள் நேரலை டிவி சேனல்களை (Live TV Channels) பார்க்க அனுமதிக்கிறது.

ஓடிடி நன்மை: இந்த திட்டத்தின் கீழ் 22 க்கும் மேற்பட்ட ஓடிடி (OTT) நன்மைகளையும் ஏர்டெல் வழங்குகிறது. இதுதான் இந்த திட்டத்தின் உண்மையான ஹைலைட் என்றே கூறலாம். இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளில் - ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile), ஜீ5 (ZEE5), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) ஆகியவைகள் அடக்கம்.

கூகுள், அடோப் நன்மை: ரூ.699-ன் கீழ் கிடைக்கும் பெரும்பாலான ஓடிடி நன்மைகள், ஓடிடி ஒருங்கிணைப்பாளர் ஆன ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே தளத்தின் மூலமே கிடைக்கின்றன. கடைசியாக ஏர்டெல்லின் ரூ.699 திட்டத்தின் கீழ் கூகுள் ஒன் (Google One), 1 ஆண்டுக்கு ரூ.4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) போன்ற மற்ற நண்மைகளும் கிடைக்கிறது.

OPINION - ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.699 பிராட்பேண்ட் திட்டம் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஹிட் பிளான்-ஆ? நம்பி ரீசார்ஜ் செய்யலாமா? முதலில் மற்றும் முக்கியமான கவனிக்கபட வேண்டிய விஷயம் இது இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறதா என்பது தான்!

ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி - ரூ.699 ஆனது எல்எஸ்ஏ (LSA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உரிமம் பெற்ற சேவை பகுதிகள் (Licensed service areas) அனைத்திலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆக வட்டத்திற்கு வட்டம் நன்மைகள் அடிப்படையில் எந்த மாற்றங்களும் இருக்காது. ஆக மேற்கண்ட நன்மைகள் உங்களுக்கு பொருத்தமானதாக, தேவையானதாக தோன்றினால் நீங்கள் ரூ.699-ஐ கருத்தில் கொள்ளலாம்.

3300ஜிபி டேட்டா என்பது "போதும் போதும்" என்கிற அளவிலான டேட்டாவாகும். ஆனால் இண்டர்நெட் ஸ்பீட்-ஐ நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் வீடுகளில் 2-3 டிவைஸ்களில் மட்டுமே இன்டர்நெட் கனெக்ஷன் தேவை என்றால்.. அதுவும் பல மணி நேரங்களுக்கான ஹெவி யூசேஜ் இருக்காது என்றால் 40எம்பிபிஎஸ் என்பது நல்ல ஸ்பீட் ஆக இருக்கும். டேட்டாவை தவிர்த்து நல்ல ஓடிடி நன்மைகளும், ஐபிடிவி சேவையும் கிடைப்பது - கூடுதல் லாபம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 699 Broadband Plan Why Its most picked broadband plans in the country
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X