ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம்.. 56 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன சலுகைகள்? இதோ விவரம்..
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஜியோவை விட சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகள் வழங்குகிறது ஏர்டெல். எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யப் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல் பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல். அதாவது ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் தான் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் வழங்கும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 649 prepaid plan) 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.
குறிப்பாக பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்களை ஏர்டெல்லின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். ஒருவேளை அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை விரும்பும் பயனர்கள் ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இங்கே அந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
மேலும் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஓடிடி சந்த தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








