Airtel சிம் இருக்கா.. ஒரே ரீசார்ஜ் 56 நாட்கள் வேலிடிட்டி.. OTT.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது ஏர்டெல். அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
மேலும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் ரூ.838 திட்டம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதுவும் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும். ஒருவேளை தினமும் 4ஜிபி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல்லின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel rs 449 prepaid Plan) ரீசார்ஜ் செய்தால் தினமும் 4ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 112ஜிபி டேட்டா வழங்கும்.

இந்த ரூ.449 திட்டத்தில் தினசரி 4GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








