Airtel பட்ஜெட் ரீசார்ஜ் திட்டம்.. இனி 56 நாட்களுக்கு நோ டென்ஷன்.. தினமும் 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
இந்தியாவில் ஜியோவுக்கு அடுத்து அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக இந்த ஏர்டெல் (airtel) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே தான் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.
ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 579 plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை
வழங்குகிறது ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. ஒருவேளை OTT நன்மைகளுடன் 56 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 838 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.838 திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








