Home
News

முழுசா 60 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் Airtel திட்டம்.. என்ன விலை?

ஜியோ (Jio) நிறுவனத்துக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் கூட வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது 60 நாட்கள் வேலிடிட்டி (60 Days Validity) மற்றும் அனிலிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

60 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் Airtel திட்டம்..

ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 619 prepaid plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes),உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக கம்மி பட்ஜெட்டில் அதிக வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் ஏர்டெல் பயனர்கள் இந்த ஏர்டெல் ரூ.619 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை ஓடிடி நன்மை, அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் உங்களுக்கு மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

60 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் Airtel திட்டம்..

அதுவும் இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆனது Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, and SunNxt போன்ற 22 ஓடிடி ஆப்களின் அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிக ஓடிடி தளங்கள் இந்த திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 619 prepaid plan offers 60 days validity and unlimited benefits: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X