இனி 56 நாட்கள் இல்ல.. 60 நாட்கள் வேலிடிட்டி.. இனிமே ரீசார்ஜ் பிச்சிக்குமே.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1.5GB டேட்டா!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களில் 2 மாத வேலிடிட்டி என்றால், 56 நாட்கள் இருக்கக் கூடாது, 60 நாட்களாக இருக்க வேண்டும், அப்படி வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்போருக்கு பக்காவான ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா என்று சலுகைகளை வாரி வழங்குகிறது. ஆனால், முக்கியமான ஒரு சலுகை மட்டும் கிடைக்காது. ஏனென்றால், இதற்கு விலை கம்மியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் மட்டுமல்ல, ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களிலும் 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் என்று வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்கள்தான் அதிகமாக கிடைக்கின்றன. 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள் என்று வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்கள் குறைவுதான். இப்படி கிடைக்கும் திட்டங்கள் அதற்கு ஏற்ப சலுகைகளை கொடுக்கிறது.

இப்போது பார்க்கப் போகும் திட்டமும் அப்படித்தான். விலைக்கு ஏற்ப சலுகைகளை கொடுத்து இருக்கிறது. ஒரேவொரு குறையாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்காது. ஆனால், தினசரி டேட்டா (Daily Data) மற்றும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை கொடுக்கிறது. மற்ற சலுகைகள் வழக்கம்போலவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஏர்டெல் ரூ 619 திட்ட விவரங்கள் (Airtel Rs 619 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முன்பே சொன்னதை போல 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Voice Calls), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகை வருகிறது.
நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் 60 நாட்களுக்கு அனுப்பி கொள்ளலாம். இந்த திட்டத்தில் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் அண்மையில் சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) சந்தா கொடுக்கப்படுகிறது.
அதுவும் 12 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. சொல்லப்போனால், இந்த பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவின் விலை ரூ.17,000ஆக இருக்கிறது. ஆனால், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஒரு கஸ்டமர்களுக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போல மேலும் சில கூடுதல் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
ஆகவே, 30 நாட்களுக்கு ஒரே ப்ரீ-ஹலோ டியூன்ஸ் சலுகை மற்றும் ஸ்பேம் கால்கள் & ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் சலுகை வருகிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சலுகையைும் இந்த 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் கொடுக்கிறது. மேற்கண்ட சலுகைகளை 60 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், மற்றொரு திட்டம் உள்ளது.
ஏர்டெல் ரூ 649 திட்ட விவரங்கள் (Airtel Rs 649 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தில் கிடைக்காத அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆனால், வேலிடிட்டியானது 56 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதேபோல தினசரி டேட்டா சலுகையையும் அதிகமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால், நாளொன்றுக்கு 2 ஜிபி கிடைக்கிறது.
மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆகவே, முந்தை திட்டத்தில் வந்த அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஆப் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் உள்ளது. மேலும், 12 மாதங்களுக்கான பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா மற்றும் ஸ்பேம் கால் அலெர்ட், ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகை கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








