Airtel போட்ட போடு.. இனி 60 நாட்களுக்கு அன்லிமிடெட்.. ரூ.300-க்கு இறக்கிவிட்டாச்சு.. மாத செலவுல வருது எல்லாமே!
இனிமேல் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 90 ஜிபி டேட்டா (90GB Data) சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகைகளையும் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் (60 Days Validity) கொடுக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆப்ஷனில் எடுக்கலாம். கிட்டத்தட்ட மாதாந்திரம் ரூ.300 செலவில் மேற்கண்ட ஒட்டுமொத்த சலுகைகளையும் வழங்குகிறது. இந்த ஏர்டெல் திட்டதில் ஸ்பேம் அலெர்ட் கூடுதலாக கிடைக்கிறது.
28 நாட்கள் அல்லது 84 நாட்கள் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நிகராக 56 நாட்கள் மற்றும் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களும் இருக்கின்றனர். இவர்களுக்காகவே வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகை கொண்ட திட்டங்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இதில் 60 நாட்கள் திட்டம் கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது.

ஏர்டெல் ரூ 619 திட்ட விவரங்கள் (Airtel Rs 619 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்தில் ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகை கூடுதலாக கிடைக்கிறது. இதன் மூலம் எந்தவொரு ஆப் இல்லாமலேயே ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை தெரிந்து கொள்ள முடியும். வாய்ஸ் கால்களை பொறுத்தவரையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி வாய்ஸ் கால்கள் (STD Voice Calls) கிடைக்கிறது.
அதேபோல ரோமிங் வாய்ஸ் கால்களையும் (Roaming Voice Calls) அனைத்து நெட்வொர்க்குக்கும் செய்து கொள்ளலாம். இந்த வாய்ஸ் கால்களை போலவே டேட்டாவும் அதிகமாகவே கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையை கொடுத்துள்ளது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (Airtel Prepaid Plan) 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி கணக்கில் மொத்தம் 90 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த நாளொன்றுக்கு வழங்கப்படும் டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 60 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் செய்து கொள்ளலாம். இதுபோக ஓடிடி மற்றும் ஏர்டெல்லின் பிரத்யேக சலுகைகள் இருக்கின்றன.
ஓடிடி சலுகையானது, பிரீமியம் சந்தாவாக கிடைக்கிறது. அதாவது, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) மூலம் பிரீமியம் அல்லாமல் கிடைக்கும் ஷோக்கள், சேனல்கள் மற்றும் மூவிக்களை இந்த திட்டத்தின் மூலம் பார்த்து கொள்ளலாம். மேலும், 3 மாதங்களுக்கு எந்தவொரு கூடுதல் தொகையும் இல்லாமலேயே அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சந்தாவை பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்துக்கு ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்காது. இந்த 5ஜி சலுகை வேண்டுமானால், ரூ.649 மதிப்பில் கிடைக்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை பெற்று கொள்ளலாம். ஆனால், அந்த திட்டத்தில் வேலிடிட்டி குறைவாக கிடைக்கும். இருப்பினும், தினசரி டேட்டா மற்றும் 5ஜி டேட்டாவை அதிகமாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகள் இதோ.
ஏர்டெல் ரூ 649 திட்ட விவரங்கள் (Airtel Rs 649 Plan Details): இந்த திட்டத்தில் கூடுதலாக டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) பெறலாம். மற்ற சலுகைகள் எல்லாம், முந்தைய திட்டத்தில் வந்ததை போலவே இருக்கின்றன. ஆகவே, 60 நாட்களுக்கு முதலாவது திட்டத்தையும், அன்லிமிடெட் 5ஜிக்கு 2ஆவது திட்டத்தையும் பெறலாம். இதேபோல டெலிகாம் செய்துகளுக்கு எங்களை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications