அடுத்த 60 நாட்கள்.. Airtel சிம் இருந்தா கண்ணை மூடிக்கிட்டு இதை பண்ணுங்க.. அன்லிமிடெட் வாய்ஸ், 1.5ஜிபி டேட்டா!
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் அடுத்த 2 மாதங்களுக்கு கம்மியான விலைக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், கண்ணை மூடிக்கொண்டு இப்போது பார்க்க இருக்கும் திட்டத்துக்கு செல்லலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 60 நாட்கள் வேலிடிட்டியில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ. 619 திட்ட விவரங்கள் (Airtel Rs 619 Plan Details): இந்த திட்டம் மாதத்துக்கு கிட்டத்தட்ட ரூ.310 செலவில் கிடைக்கிறது. 2 மாத திட்டங்களாக இருந்தால், வழக்கமாக 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இதில் 60 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. முழுதாக 2 மாதங்களுக்கு அனைத்து சலுகைகளையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 60 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD & Roaming Voice Calls) செய்து கொள்ள கிடைக்கும். தினமும் 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 60 நாட்களுக்கு மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது 4ஜி வேகத்தில் மட்டுமே கிடைக்கும்.
ஏனென்றால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படவில்லை. இருப்பினும், 1.5 ஜிபி டேட்டா முடிந்த பிறகு குறைவான வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை பயன்படுத்தி கொள்ளும்படி 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த முக்கிய சலுகைகள் போக மூன்று கூடுதல் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.
முதாவது சலுகையாக ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) கிடைக்கிறது. இதை 30 நாட்களுக்கு ஒரு டியூன் வீதம் 2 முறை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த சலுகையாக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் ஸ்பேம்களை ரியல் டைமில் அலெர்ட் செய்து கொள்ளும் சலுகை கிடைக்கிறது. இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.
மூன்றாவதாக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாகவும், அண்மையாகவும் சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ (Perplexity AI Pro) சந்தா கிடைக்கிறது. சொல்லப்போனால், இந்த சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 60 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒருவேளை இதைவிட மலிவான விலைக்கு திட்டம் வேண்டும், அதிலும் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு வேலிடிட்டி இருக்க வேண்டும் என்று கேட்டால், மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், இதில் 56 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். மற்றபடி சலுகைகளில் பெரிய மாற்றங்கள் இருக்காது. முந்தைய திட்டத்தில் பார்த்த சலுகைகள் இதிலும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ. 579 திட்ட விவரங்கள் (Airtel Rs 579 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது கம்மியாக தெரிந்தாலும், முந்தைய திட்டத்தைவிட விலையிலும் மலிவாக கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஆகவே, மொத்தமாக வேலிடிட்டி முழுவதுக்கும் 84 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் கிடைக்கிறது. அதேபோல தினமும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். ப்ரீ ஹலோ டியூன்ஸ், லைவ் ஸ்பேம் அலெர்ட் மற்றும் 12 மாதங்களுக்கு பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தா கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








