ஏர்டெல் ரூ. 619 பிளான்: 60 நாட்கள் வேலிடிட்டி - இது ஜியோவை விட பெஸ்டா?
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டும் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில், நடுத்தர பட்ஜெட்டில் 2 மாதங்கள் வரை வேலிடிட்டி கொண்ட திட்டங்களை தேடும் பயனர்களுக்காக ஏர்டெல் ரூ.619 திட்டத்தையும், ஜியோ ரூ.629 திட்டத்தையும் வழங்குகின்றன. விலையில் வெறும் 10 ரூபாய் மட்டுமே வித்தியாசம் கொண்ட இந்த இரண்டு திட்டங்களில், எந்த நிறுவனம் அதிக நன்மைகளை வாரி வழங்குகிறது என்பதைப் பற்றிய ஒரு விரிவான ஒப்பீட்டுச் செய்தி இதோ:
ஏர்டெல் ரூ. 619 திட்டத்தின் முழு விவரங்கள்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 619 ப்ரீபெய்ட் திட்டமானது, பட்ஜெட் விலையில் நீண்ட நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரி டேட்டாவை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக 60 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டுள்ளது.

பயனர்களுக்கு தினமும் 1.5 GB அதிவேக 4G டேட்டா வழங்கப்படுகிறது. இதன்படி, இந்தத் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 90 GB டேட்டா கிடைக்கிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற உள்ளூர் (Local) மற்றும் எஸ்டிடி (STD) குரல் அழைப்புகளை (Voice Calls) மேற்கொள்ளலாம். அத்துடன் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் உண்டு.
கூடுதல் நன்மைகள்: ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) மூலம் இலவச திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். மேலும், இலவச ஹலோ ட்யூன்ஸ் (Hello Tunes) மற்றும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஸ்பேம் அலெர்ட் போன்ற கூடுதல் சலுகைகளும் இதில் அடங்கும். இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டா சலுகை கிடையாது.
ஜியோ ரூ. 629 திட்டத்தின் முழு விவரங்கள்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.629 திட்டமானது கூடுதல் டேட்டா மற்றும் 5G வேகத்தை விரும்பும் பயனர்களைக் குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 56 நாட்கள் ஆகும். தினசரி டேட்டா: பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. 56 நாட்களுக்குச் சேர்த்து மொத்தம் 112 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.
அன்லிமிட்டெட் 5ஜி சலுகை: ஜியோவின் இந்தத் திட்டத்தில் தகுதியான பயனர்களுக்கு வரம்பற்ற இலவச 5G டேட்டா (Unlimited 5G Data) வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியில் ஜியோ 5G நெட்வொர்க் இருந்து, உங்களிடம் 5G ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் தினசரி 2 GB வரம்பைத் தாண்டியும் இலவசமாக இணையத்தைப் பயன்படுத்தலாம்.
எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவசக் குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதி இதில் உள்ளது. கூடுதல் நன்மைகள்: ஜியோ டிவி (JioTV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோவின் பிரத்யேக ஆப்களுக்கான இலவச அணுகல் வழங்கப்படுகிறது.
இறுதி தீர்ப்பு: நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?
வேலிடிட்டி மற்றும் சிக்கனம் முக்கியம் என்றால், உங்களுக்குத் தினசரி டேட்டாவை விட கூடுதல் நாட்கள் வேலிடிட்டி தான் முக்கியம் மற்றும் குறைந்த செலவில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஏர்டெல் ரூ. 619 திட்டம் மிகச் சிறந்த தேர்வாகும். இது ஜியோவை விட 4 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியைத் தருகிறது.
அதிக டேட்டா மற்றும் 5G வேகம் முக்கியம் என்றால், நீங்கள் அதிகளவில் இணையத்தைப் பயன்படுத்துபவர், உங்களிடம் 5G மொபைல் இருக்கிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு ஜியோ ரூ. 629 திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 56 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே இருந்தாலும், தினமும் 2 GB டேட்டாவுடன் சேர்த்து, வரம்பற்ற 5G இணையச் சலுகையும் கிடைப்பதால் இதுவே அதிக லாபகரமான திட்டமாக அமைகிறது.
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை போல பெரும்பாலான நகரங்களில் வோடபோன் ஐடியா இன்னும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கொடுக்கவில்லை. ஆகவே, இந்த திட்டங்களுடன் வோடபோன் ஐடியா திட்டங்களை ஒப்பீடு செய்யவில்லை. 4ஜி திட்டங்களுடன் ஒப்பிட்டு அடுத்த செய்தி வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications