ஒரே Airtel ரீசார்ஜ்.. 2 ஜிபி இல்ல.. 3 ஜிபி இல்ல.. 60 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
ஏர்டெல் கஸ்டமர்களில் தினசரி டேட்டா வேண்டாம் அதிகப்படியான லம்ப்-சம் டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்போருக்கு 60 ஜிபி டேட்டாவுடன் ஒரு திட்டம் இருக்கிறது. லம்ப்-சம் டேட்டா என்றாலே, 10 ஜிபிக்குள் மட்டுமே இருக்கும். அதில் வாய்ஸ் கால்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், இதில் டேட்டாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.
வாய்ஸ் கால்கள் மற்றும் வேலிடிட்டி போதும் டேட்டா அதிகம் வேண்டாம் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 1 ஜிபி, 6 ஜிபி மற்றும் 7 ஜிபி டேட்டா மட்டுமே கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கின்றன. இதற்கு முறையே 24 நாட்கள், 77 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்று அதிக வேலிடிட்டி கிடைக்கின்றன. அதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும். இதில் அதிக டேட்டா கொண்ட திட்டங்களும் இருக்கின்றன.

ஏர்டெல் ரூ 609 திட்ட விவரங்கள் (Airtel Rs 609 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஒரு மாத வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, காலண்டர் மாத நாட்களில் வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்களுக்கு மொத்தமாக 60 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கு தினசரிக்கு லிமிட் கொடுக்கப்படவில்லை. அதேபோல இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டாவும் கிடைக்காது.
ஆகவே, ஒரு மாதத்துக்குள் 60 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி முடித்துவிட்டால், கூடுதல் டேட்டாவுக்கு வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்காது. இந்த டேட்டா சலுகையை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்காது. மொத்தமாக 300ஆக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சலுகை மற்றும் ஸ்பேம் கால்கள், ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இறுதியாக அண்மையில் சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்சிடி ப்ரோ ஏஐ சந்தா கொடுக்கப்படுகிறது.
இதைவிட மலிவான விலைக்கு மற்றொரு அதிக லம்ப்-சம் டேட்டா கொண்ட திட்டம் இருக்கிறது. இதில் வேலிடிட்டி மட்டும் 30 நாட்களுக்கு கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, வாய்ஸ் கால்கள் தொடங்கி, ஸ்பேம் அலெர்ட் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் ஒரே மாதிரியாக கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.
ஏர்டெல் ரூ 589 திட்ட விவரங்கள் (Airtel Rs 589 Plan Details): இது விலை குறைவாக இருப்பதால், 50 ஜிபி டேட்டாவை மட்டும் கொடுக்கிறது. 30 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. மேலும், பெர்ப்லெக்சிடி ப்ரோ ஏஐ சந்தா, ப்ரீ ஹலோ டியூன்ஸ், ஸ்பேம் அலெர்ட் சலுகைகளை இந்த திட்டமும் கொடுக்கிறது.
ஒரு சில ஏர்டெல் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு கொடுக்கும் டேட்டா போதாமல் இருக்கும். ஆகவே, அவர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கும் திட்டத்துக்கு செல்வார்கள். ஆனால், 4ஜி கஸ்டமர்களுக்கு தினசரிக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா மட்டுமே கிடைக்கும். அதைவிட கூடுதலாக டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி வரும். இவர்களுக்கே மேற்கண்ட திட்டங்கள் சரியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








