Home
News

கேபிள் TV அம்பேல்.. ரூ.599-க்கு மொத்தமா முடிஞ்சிருச்சு.. லைவ் டிவி சேனல்கள், 30எம்பிபிஎஸ் டேட்டா, ஓடிடி சந்தா!

கேபிள் டிவிக்கு நேரடி மாற்றாக ஏர்டெல் (Airtel) நிறுவனம், லைவ் டிவி சேனல்களை (Live TV Channels) மட்டுமல்லாமல், பிரீமியம் ஓடிடி ஆப்கள், வை-பை டேட்டா (WiFi Data) மற்றும் லேண்ட்லைன் கனெக்டிவிட்டி வழியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) கொடுக்கிறது. இந்த திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் பிளாக் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கும். இதற்கு மாதாந்திர வேலிட்டி மட்டுமல்லாமல், 3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் போன்ற வேலிடிட்டி ஆப்ஷன்களும் இருக்கின்றன. இதற்கு ஏற்ப விலையிலும் மாற்றம் இருக்கும். கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும்.

கேபிள் TV அம்பேல்.. ரூ.599-க்கு மொத்தமா முடிஞ்சிருச்சு.. டிவி சேனல்!

முதல் முறை திட்டத்தை பெற்றால், டிவைஸ் மற்றும் இன்ஸ்டாலேஷன் கட்டணம் இருக்கும். ஆனால், இந்த திட்டத்தை பெற்ற பிறகு மாதத்துக்கான தொகையை செலுத்தினால் போதும் சேவைகள் கிடைக்கும். அதேபோல டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி, வை-பை டேட்டா, வாய்ஸ் கால்கள் போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ 599 திட்ட விவரங்கள் (Airtel Rs 599 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ரூ.350 மதிப்பிலான லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும். ஆகவே, இதில் பிரீமியம் டிவி சேனல்கள் மற்றும் எச்டி சேனல்களும் இருக்கும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium) சந்தா கொடுக்கப்படும்.

இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் (Airtel Xstream) சந்தா கிடைக்கிறது. இதில் கூடுதல் ஓடிடி ஆப்களை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டிவியில் லைவ் சேனல்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஓடிடி ஆப்களையும் கஸ்டமர்கள் பார்த்து கொள்ள முடிகிறது. லைவ் டிவி சேனல்களுக்கு டேட்டா தேவையில்லை. ஆனால், ஓடிடிகளுக்கு வேண்டும்.

இதற்கு ஏற்பவே 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு ரூட்டர் கொடுக்கப்படும். ஆகவே, டிவி மட்டுமல்லாமல், மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற டிவைஸ்களிலும் கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த டேட்டா மட்டுமல்லாமல், இதே கனெக்சன் வழியாக லேண்ட்லைன் (Landline) சேவை கிடைக்கிறது.

இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி கால்களை (STD Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். ஆனால், வாய்ஸ் கால்களை செய்துகொள்ள கஸ்டமர்களிடம் டிவைஸ் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் கொடுக்கப்படாது. இதுவரையில் டிவி சேனல்கள், ஓடிடி ஆப்கள், வை-பை டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை பார்த்தோம்.

இனிமேல் கூடுதல் சலுகைகளை பார்க்கலாம். இந்த ஏர்டெல் ரூ 599 திட்டத்தில் கூகுள் ஒன் (Google One) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தா வழியாக 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும், Perplexity Pro AI சந்தாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. இந்த சலுகைகளே இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்துக்கு கிடைக்கிறது.

இதில் கிடைக்கும் 30 எம்பிபிஎஸ் வேக டேட்டா போதாதபட்சத்தில் ஏர்டெல் ரூ.899 திட்டத்தை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட 3 மடங்கு அதிகமான வேகமாக இருக்கிறது. மேலும், ரூ.350 மதிப்பிலான லைவ் டிவி சேனல்களின் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

லேண்ட்லைன் வழியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் கிடைக்கும். கூகுள் ஒன் சந்தா உள்ளது. ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் Perplexity Pro AI சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதில் கூடுதல் டேட்டா வேகம் கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 599 Plan With Rs 350 Worth TV Channels 30 Mpbs Speed WiFi Data Check Airtel Black Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X