Home
News

கேபிள் டிவி அம்பேல்.. 38 மாவட்டங்களில் சேவை.. ரூ.599 போதும்.. 350 டிவி.. 20 ஓடிடி சந்தா.. இனி ஏர்டெல் ஆட்டம்!

வை-பை இன்டர்நெட் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களின் சந்தா, லைவ் டிவி சேனல்களின் சந்தா போன்ற ஒட்டுமொத்த சேவைகளையும் கம்மியான விலைக்கு கொடுத்துவந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் (Airtel Xstream Fiber) சேவைகள் இப்போது, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.599 கட்டணத்தில் வை-பை டேட்டா (Wi-Fi) மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களின் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவைகள் குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவைகள் சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே கிடைத்துவந்தது. மலிவான விலையில் பல்வேறு சலுகைகளை கொண்டிருப்பதால், மற்ற மாவட்டங்களிலும் எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

கேபிள் டிவி அம்பேல்! 38 மாவட்டங்களில் சேவை.. ரூ.599 போதும் டிவி சேனல்!

இதன் மூலம் 25 லட்சம் கஸ்டமர்களை ஏர்டெல் நிறுவனம் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் சேவைகளுக்கு ரூ.499 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. அதிகபட்சம் ரூ.3999 வரையில் திட்டங்கள் இருக்கின்றன. இருப்பினும், டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல்களுக்கு ரூ.599 முதலே திட்டங்கள் தொடங்குகிறது.

ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): இதுவொரு ஆரம்ப வை-பை திட்டமாகும். இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கும். ஆனால், ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் சலுகை கிடைக்காது. இதுபோன்ற சலுகைகளுக்கு பின்வரும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டம் சரியாக இருக்கும்.

ஏர்டெல் ரூ 599 திட்ட விவரங்கள் (Airtel Rs 599 Plan Details): இந்த திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) சந்தாவை பெற்று கொள்ளலாம். மேலும், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி ஆப்களின் சந்தாவும் வருகிறது.

இந்த சந்தா மூலம், சோனிலிவ் (SonyLIV), ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஃபேன் கோட் (Fan Code), எபிக் ஆன் (Epic On), கிளிக் (Klikk), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), டாகுபே (Docubay), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) மற்றும் ஷீமாரூமீ (Shemaroome) ஆகிய ஓடிடி ஆப்களின் சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

மேலும், மனோரமா மேக்ஸ் (Manorama Max), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாலிவுட்பிளே (Dollywood Play), ஹங்கமா (Hungama), , அல்ட்ரா (Ultra), சோஷியல் ஸ்வாக் (Social Swag), ஹோய்சோய் (HoiChoi), சாவ்பால் (Chaupal), டிவோ (DIVO) மற்றும் கான்ச்சா லங்கா (Kanccha Lanka) போன்ற 20+ ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தலாம்.

இந்த சலுகைகள் எல்லாம் போக, 350+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதில் எச்டி சேனல்களும் கிடைக்கிறது. ஆகவே, வை-பை ரூட்டர், செட்-டாப் பாக்ஸ் டிவைஸ்கள் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இதற்கு ஜிஎஸ்டி மற்றும் கூடுதல் கட்டணங்கள் இருக்கிறது. ஆனால், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்தினால், இலவசமாக அவை கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 599 Plan With 30Mbps Speed Data 350 TV Channels 20 OTT Across 38 Districts in Tamil Nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X