ஏர்டெல்லின் ஆட்டம்.. வெறும் ரூ.599 போதும்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 வருட ஹாட்ஸ்டார் சந்தா.. 200 ஜிபி டேட்டா!
ஜியோ நிறுவனமே மூக்கில் விரல் வைக்கும்படி வெறும் ரூ.599 மதிப்புள்ள திட்டத்தில், 2 சிம் கார்டு கனெக்சன், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 105ஜிபி டேட்டா, 200ஜிபி ரோலோவர் டேட்டா, 1 வருடத்துக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா போன்ற சலுகைகளை ஏர்டெல் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ 599 திட்ட விவரங்கள் (Airtel Rs 599 Plan Details): இதுவொரு போஸ்ட்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் 1 பிரைமரி சிம் மற்றும் 1 கூடுதல் சிம் கார்டுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, பிரைமரி சிம் கார்டுக்கு 75 ஜிபி டேட்டா மற்றும் கூடுதல் சிம் கார்டுக்கு 30 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

அதோடு 200 ஜிபி டேட்டா ரோலோவர் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஏர்டெல் தேங்க்ஸ் (Airtel Thanks) பண்டில் வழங்கப்படுகிறது.
இதன் கீழ் 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா மற்றும் 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல விங்க் பிரீமியம் (Wynk Premium) சந்தாவை பயன்படுத்தலாம். இதேபோன்று 3 ஃபேமிலி சிம் கார்டுக்கு சலுகை வேண்டுமானால், ரூ 999 திட்டம் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): இதுவும் போஸ்பெய்ட் திட்டமாகும். இந்த திட்டத்தில் கூடுதலாக 3 சிம் கார்டுகளுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, பிரைமரி சிம் கார்டுக்கு 100 ஜிபி டேட்டாவும், கூடுதல் சிம் கார்டுகளுக்கு தலா 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.
அதேபோல 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே, 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா மற்றும் 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. இப்போது, ரூ 1199 திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.
ஏர்டெல் ரூ 1199 திட்ட விவரங்கள் (Airtel Rs 1199 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்திலும் 1 பிரைமரி மற்றும் 3 கூடுதல் சிம் கார்டுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 150 ஜிபி டேட்டா பிரைமரி சிம் கார்டும், தலா 30 ஜிபி டேட்டா கூடுதல் சிம் கார்டுகளுக்கும் என மொத்தமாக 240 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.
அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா, 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் விங்க் பிரீமியம் (Wynk Premium) சந்தா கிடைக்கிறது. இப்போது, ரூ 1499 மதிப்புள்ள திட்ட விவரங்களை பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 1 பிரைமரி சிம் மற்றும் 4 கூடுதல் சிம் கார்டுகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆகவே, 150 ஜிபி டேட்டா பிரைமரி சிம்முக்கும், தலா 30 ஜிபி டேட்டா கூடுதல் சிம் கார்டுகளுக்கும் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்திலும் 100 எஸ்எம்எஸ், 200 ஜிபிக்கான டேட்டா ரோலோவர் சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல 6 மாதத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா, 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் பிரீமியம் சந்தா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








