ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம்.. எக்கச்சக்க OTT சந்தா.. என்னென்ன நன்மைகள்.. எத்தனை நாட்கள் வேலிடிட்டி?
ஏர்டெல் (Airtel) நிறுவனம் பட்ஜெட் விலையில் ஓடிடி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக ஓடிடி சந்தா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை தான் தற்போது மக்கள் தேர்வு செய்கின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல்லின் ரூ.598 திட்டம் ஆனது அதிக ஓடிடி நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குகிறது. இங்கே அந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) திட்டத்தில் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற ஓடிடி சந்தாக்கள் கிடைக்கிறது. இவை அனைத்து மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

குறிப்பாக ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.598 திட்டம் ஆனது அதிக ஓடிடி நன்மைகள், தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை அமேசான் பிரைம் சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் ரூ.838 திட்டம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 20-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.
மேலும் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








