இந்த Airtel திட்டம் தான் ஹைலைட்டே.. எக்கச்சக்க OTT சந்தா.. டெய்லி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. என்ன விலை?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் வழங்கும் ஓடிடி சந்தா ப்ரீபெய்ட் திட்டங்களுக்குத் தான் இப்போது அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜியோவை விட கம்மி பட்ஜெட்டில் அதிக ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக ஓடிடி சந்தா தரும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) திட்டம் தான் அதிக ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற ஓடிடி சந்தாக்கள் கிடைக்கிறது. குறிப்பாக இவை அனைத்து மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்
அதேபோல் ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. கம்மி பட்ஜெட்டில் அதிக ஓடிடி சந்தா வேண்டும் என்றால் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை அமேசான் பிரைம் லைட் சந்தா மட்டும் போதும் என நினைக்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.838 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் ரூ.838 திட்டம். மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்க.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








