இப்படி இருக்கனும் ரீசார்ஜ்.. ரூ.598 முடிச்ச ஏர்டெல்.. 2 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எக்கச்சக்க ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) யூசர்களில் பிரீமியம் ஓடிடி ஆப்களை விரும்புவோருக்கு ரூ.279 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. இந்த ஓடிடி திட்டங்கள் (OTT Plans) டேட்டா வவுச்சராகவும், வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகைகளை கொடுக்கும்படியும் இருக்கின்றன. பிரீமியம் ஓடிடி ஆப்களுடன் கிடைக்கும் மூன்று திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். முதலில் அதிக விலைக்கு கிடைக்கும் திட்டத்தில் இருந்து தொடங்கலாம்.
ஏர்டெல் ரூ 1729 திட்ட விவரங்கள் (Airtel Rs 1729 Plan Details): இந்த திட்டம் அதிக விலைக்கு கிடைப்பதால், வெறும் ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்காது. கூடுதலாக வாய்ஸ் கால்கள், டேட்டா உள்ளிட்ட சலுகைகளையும் கொடுக்கிறது. ஓடிடி சலுகைகளை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super) சந்தா மற்றும் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கிடைக்கிறது.

மேலும், ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium) சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா வருகிறது. இதில் எக்ஸ்ட்ரீம் பிளே மூலமாக ஒரே ஆப் மூலம் கூடுதலாக பல்வேறு ஓடிடி ஆப்களை பெற்று கொள்ள முடிகிறது. ஆகவே, சோனி லிவ் (SonyLIV), சன்நெக்ஸ்ட் (SunNXT) மற்றும் ஆஹா (Aha) கிடைக்கிறது. லயன்ஸ்கேட் பிளே (Liongates Play) உள்ளது.
அதேபோல சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi) போன்ற ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ள முடிகிறது. இந்த ஓடிடி சலுகைகளுக்கு அடுத்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. தினசரி டேட்டாவை பார்க்கையில், 2 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உள்ளது.
மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி நாட்கள் முழுவதும் ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு அடுத்து கம்மியான வேலிடிட்டியில் மேற்கண்ட பிரீமியம் ஓடிடி ஆப்களுடம் மற்றொரு திட்டம் கிடைக்கிறது. இதன் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 598 திட்ட விவரங்கள் (Airtel Rs 598 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் ஓடிடி சலுகைகளை பொறுத்தவரையில், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா, ஜீ5 பிரீமியம் சந்தா கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவின் கீழ் சோனி லிவ், சன்நெக்ஸ்ட், ஆஹா மற்றும் லயன்ஸ்கேட் பிளே போன்ற சலுகைகள் வருகின்றன.
இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகைகளும் அடங்குகிறது.
ஏர்டெல் ரூ 279 திட்ட விவரங்கள் (Airtel Rs 279 Plan Details): பிரீமியம் ஓடிடி ஆப்களுடன் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இதில் ஜியோஹாட்ஸ்டார் சூப்பர், நெட்பிளிக்ஸ் பேசிக், ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் கிடைக்கிறது. 1 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இதுவொரு டேட்டா + ஓடிடி திட்டமாகும். ஆகவே, மற்ற சலுகைகள் இல்லை. 1 மாதம் வேலிடிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








