ஏர்டெல், ஜியோ.. ரூ.598 மற்றும் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?
ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து அதிக ஓடிடி சந்தா நன்மைகளை வழங்கியது. ஆனால் ஏர்டெல் நிறுவனத்திடம் ஏற்கனவே இது போன்ற ஒரு திட்டம் உள்ளது.
அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டமும் அதிக ஓடிடி சந்தா நன்மையை வழங்குகிறது. சரி இப்போது ஜியோவின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது. இதில் எதைத் தேர்வு செய்வது நல்ல என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 500 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆகவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிவிஎம்இ, (Amazon PVME), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற ஓடிடி சந்தாக்கள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் மூலம் 15க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா தளங்களை பயன்படுத்த முடியும்.
எந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது?
ஏர்டெல் ரூ.598 மற்றும் ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டங்கள் டேட்டா மற்றும் வேலிடிட்டி போன்றவற்றை ஒரே மாதிரியாகத் தான் வழங்குகின்றன. ஆனால் ஜியோவை விட ஏர்டெல் திட்டம் அதிக ஓடிடி நன்மைையை வழங்குகிறது. குறிப்பாக நெட்பிளிக்ஸ் போன்ற முக்கியமான ஓடிடி சந்தாவும் வழங்குகிறது. எனவே ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








