Home
News

இறங்கி அடிச்ச Airtel.. ரூ.59 டேட்டா பேக் அறிமுகம்.. இனிமே சனி, ஞாயிறு ஒரே ஜாலிதான்.. ஏன்?

ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி கொண்டே இருக்கிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். இந்நிலையில் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பேக் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனம் ரூ.59 வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பேக் (Airtel Rs 59 Weekend Data Rollover Pack) திட்டத்தை தான் தற்போது அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. telecomtalk இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறங்கி அடிச்ச Airtel.. இனிமே சனி, ஞாயிறு ஒரே ஜாலிதான்.. ஏன்?

அறியாதோர்களுக்கு வீகெண்ட் டேட்டா ரோல்ஓவர் நன்மையின் கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தப்படாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் ஒரு நன்மையாகும். வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது ஏர்டெல் நிறுவனமும் வழங்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக ரூ.59 வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பேக் திட்டத்தை தேர்வு செய்யும் முன்பு உங்களிடம் ஒரு ஆக்டிவ் ஏர்டெல் பிளான் இருக்க வேண்டும். அதற்கு மேலாகத்தான் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். அதுவும் 2GB தினசரி டேட்டா கொண்ட திட்டத்தைப் பயன்படுத்தும் ப்ரீபெய்டு சந்தாதாரர் ஒரு நாளைக்கு 1GB டேட்டாவை மட்டுமே பயன்படுத்தினால், அவர்களின் தினசரி ஒதுக்கீட்டில் மீதமுள்ள 1GB டேட்டா அன்று இரவு 12 மணிக்குள் வீணாகிவிடும்.

எனவே இந்த டேட்டா ரோல்ஓவர் திட்டம் மூலம் பயனர்கள் பயன்படுத்தப்படாத டேட்டாவை வீணாக்காமல் வார இறுதியில் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த ரூ.59 வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பேக் ஆனது ஹரியானா (Haryana) மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் (North East)உள்ள ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இன்னும் தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.59 வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் பேக் வேலிடிட்டி 28 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை இப்போது பார்க்கலாம்.

இறங்கி அடிச்ச Airtel.. இனிமே சனி, ஞாயிறு ஒரே ஜாலிதான்.. ஏன்?

ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 929 plan) திட்டம் தான் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 59 Weekend Data Rollover Pack Launched: check benefits and validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X