Home
News

Airtel-க்கு இது போதுமே.. இனி 56 நாட்களுக்கு நோ டென்ஷன்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 1.5 ஜிபி டேட்டா!

ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைககளுடன் 2 மாத வேலிடிட்டியுடன் கிடைக்கும் மூன்று ரீசார்ஜ் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். 56 நாட்கள் அல்லது 60 நாட்கள் வேலிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், இந்த திட்டங்களே ஆரம்ப விலைக்கு கிடைக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) விவரங்கள் இதோ.

டெலிகாம் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் என்று பொதுவான வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் பெரும்பாலான கஸ்டமர்கள் 28 நாட்கள் அல்லது 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களையே ரீசார்ஜ் செய்ய விரும்புவார்கள். 1 மாதம் அல்லது 2 மாதத்துக்கு ஆகும் செலவை கணக்கிட்டு ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். ஏர்டெல்லில் 56 நாட்களுக்கு 3 பெஸ்ட் ஆப்ஷன்கள் இருக்கின்றன.

Airtel-க்கு இது போதுமே.. இனி 56 நாட்களுக்கு நோ டென்ஷன்.. அன்லிமிடெட்!

ஏர்டெல் ரூ 579 திட்ட விவரங்கள் (Airtel Rs 579 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தொடங்கும் முதலாவது திட்டமாகும். இதற்கு கம்மியான விலையில் தினசரி டேட்டாவுடன் 56 நாட்கள் திட்டம் கிடையாது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) வருகிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்காது. மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் கால்கள் கிடைக்கிறது. இதில் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) கால்கள் அடங்குகிறது. ஸ்பேம் அலெர்ட், எக்ஸ்ட்ரீம் ஆப் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 649 திட்ட விவரங்கள் (Airtel Rs 649 Plan Details): அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதேபோல தினசரி டேட்டாவும் இதில் அதிகமாக கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா சலுகை வருகிறது.

Airtel-க்கு இது போதுமே.. இனி 56 நாட்களுக்கு நோ டென்ஷன்.. அன்லிமிடெட்!

மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் முந்தைய திட்டத்தில் கிடைத்த அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. அதேபோல ஸ்பேம் அலெர்ட், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சலுகைகளையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இதற்கு அடுத்த திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 619 திட்ட விவரங்கள் (Airtel Rs 619 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, முந்தைய திட்டத்தைவிட விலை குறைவாக இருந்தாலும் வேலிடிட்டி அதிகமாக கொடுக்கிறது. அதே நேரத்தில் தினசரி டேட்டாவும் குறைவாக கிடைக்கிறது. அதேபோல இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடையாது. 64 கேபிபிஎஸ் வேக போஸ்ட் டேட்டா மட்டுமே கிடைக்கும்.

ஆகவே, இந்த 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. மேலும், ஸபேம் அலெர்ட், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சலுகைகளை பெற்று கொள்ளலாம். இதில் உங்களுக்கானதை ரீசார்ஜ் செய்யுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 579 Plan With Unlimited Voice Calls 56 Days Validity Check Airtel Best 2 Months Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X