அறக்க பறக்க ரீசார்ஜ்.. ரூ.557 க்கு 12 மாதங்களுக்கு அடோப் சந்தா.. 56 நாட்களுக்கு 1.5GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்!
ஏர்டெல் (Airtel) சிம் கார்டு வைத்திருக்கும் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் 56 நாட்களுக்கு கம்மியான செலவில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சலுகைகளை பெற விரும்பினால், இப்போது பார்க்க இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். மேலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.
டெலிகாம் நிறுவனங்களுக்கு ஒரு மாதம் என்றால் 28 நாட்களாகவே இருக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினால், 56 நாட்கள் வேலிடிட்டியுடன் திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் ஓரளவுக்கு கம்மியான விலைக்கு நல்ல சலுகைகளை கொண்ட திட்டமாக ஏர்டெல் ரூ.579 திட்டம் உள்ளது. மொத்த சலுகைகளும் விலைக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல் ரூ.579 திட்ட விவரங்கள் (Airtel Rs 579 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இதில் கிடைக்கும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
சொல்லப்போனால், இந்த சந்தாவை தனியாக பெற்றால், ரூ.4000 செலவு செய்ய வேண்டும். ஆனால், ஏர்டெல் நிறுவனம், முற்றிலும் இலவமாக கொடுத்து உள்ளது. முன்னதாக பெர்ப்லெக்ஸிடி ஏஐ ப்ரோ சந்தாவை வருடம் முழுவதும் இலவமாக கொடுத்து வந்தது. ஆனால், இந்த சலுகை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், புதிய சலுகையாக இந்த அடோப் சந்தா சேர்க்கப்பட்டு உள்ளது.
56 நாட்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களின் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவையும் இந்த ஏர்டெல் ரூ.579 திட்டம் கொடுத்துள்ளது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை குறைக்கப்பட்டுவிடும்.
இது மலிவு விலையில் கிடைக்கும் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இருப்பதால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படவில்லை. ஆகவே, 1.5 ஜிபி டேட்டா வீதம் 56 நாட்களுக்கு மொத்தமாக 84 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும், 56 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை கொடுத்து உள்ளது.
இந்த சலுகைகள் போக மூன்று கூடுதல் சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.579 திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 30 நாட்களுக்கு ஒரு ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையை பெறலாம். ஸ்பேம் அலெர்ட் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவும் கொடுக்கப்படும். இதில் ப்ரீ வெர்ஷன் சோனிலிவ், அமேசான் எம்எக்ஸ் பிளேயர் உள்ளிட்டவை கிடைக்கும்.
இதே 56 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், ஏர்டெல் ரூ. 649 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை 56 நாட்கள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கும்.
ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு கிடைக்கும். 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கொடுக்கப்படும். ப்ரீ ஹலோ டியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலெர்ட் சலுகைகளையும் இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications








