Home
News

அள்ளி தரும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல 84 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. OTT.. யாரு விடுவா?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) உடன் இணைந்து விரைவில் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் செயற்கைக்கோள் இணையச் சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக சலுகைகளைத் தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அள்ளி தரும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல 84 நாள் வேலிடிட்டி..

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 549 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.549 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதேபோல் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் ( (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகள் வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 469 prepaid plan) ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம்.

மேலும் 900 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது. குறிப்பாக அழைப்பு நன்மைகளை மட்டுமே விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 429 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 77.5ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.429 திட்டத்தில் கிடைக்கும். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் ரூ.5 டாக்டைம் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 549, Rs 469 and Rs 429 prepaid plans offer OTT, unlimited calling: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X