Home
News

இப்படி இருக்கனும் ரீசார்ஜ்.. ரூ.549 க்கு 300 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 1 வருடத்துக்கு ஓடிடி சந்தா!

ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு அதிகப்படியான சலுகைகளுடன் கிடைக்கும் ஏர்டெல் ரூ.549 திட்டமானது, நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 300 ஜிபி டேட்டா, 100 ஜிபி கிளவுட் டேட்டா, 1 வருடத்துக்கு ஓடிடி சந்தா போன்ற பல்வேறு சலுகைகளில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் (Airtel Postpaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு தனி நபர் திட்டம் மற்றும் ஃபேமிலி திட்டம் கிடைக்கிறது. அதாவது, தனி நபர் திட்டத்தி ஒரே சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கொடுக்கப்படும். ஆனால், ஃபேமிலி திட்டத்தில் கூடுதலாக சிம் கார்டுகளை இணைத்து கொள்ளலாம். இப்போது, பார்க்க இருக்கும் திட்டமானது, தனி நபருக்கு மட்டுமே கிடைக்கிறது. ஃபேமிலி சிம் கார்டை ஆட் செய்ய முடியாது.

இப்படி இருக்கனும் ரீசார்ஜ்.. ரூ.549 க்கு 300 ஜிபி டேட்டா.. சலுகைகள்?

ஏர்டெல் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Airtel Rs 549 Postpaid Plan Details): 300 ஜிபி டேட்டாவை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் கால்களை (Unlimited Calls) செய்து கொள்ளலாம். இதில் லோக்கல் & எஸ்டிடி ரோமிங் (STD Roaming) கால்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களில் குறையில்லை.

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு ஏகப்பட்ட கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. முதலில் ஓடிடி சலுகைகளை பார்க்கலாம், இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் (JioHotstar Mobile Subscription) உள்ளது. இதை 12 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த பிரீமியம் ஓடிடி ஆப்கள் போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரே சந்தாவின் 20+ ஓடிடி ஆப்களை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கிடைக்கிறது. இதை கூகுள் ஒன் (Google One) வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வளவு சலுகைகள் போக லேட்டஸ்ட் சலுகையாக சேர்க்கப்பட்ட அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சந்தாவையும் 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இறுதியாக ப்ராடு டிடெக்சன் (Fraud Detection) மற்றும் ஸ்பேம் அலெர்ட் (Spam Alerts) சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது.

இதேபோல சலுகைகளுடன் கூடுதலாக ஒரு சிம் கார்டை ஆட் செய்ய விரும்பினால், ஏர்டெல் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு செல்லலாம். இதில் 2 சிம் கார்டுகளுக்கு சலுகைகள் கிடைக்கும். அதாவது, பிரைமரி சிம் கார்டு மற்றும் ஃபேமிலி சிம் கார்டுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகள் கிடைக்கும். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்ட விவரங்கள் (Airtel Rs 699 Postpaid Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 330 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. கூடுதலாக ஆட் செய்யும் ஃபேமிலி சிம் கார்டுக்கு 30 ஜிபி டேட்டா கிடைக்கும். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தில் பார்த்தை போலவே கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 549 Postpaid Plan With 300 GB Data Unlimited Local STD Roaming Check Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X