Home
News

ஏர்டெல் ரூ.549 மற்றும் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டங்கள்.. என்னென்ன நன்மைகள்? எதை தேர்வு செய்வது நல்லது?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் ரூ.598 மற்றும் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரி வேலிடிட்டி தான் வழங்குகிறது. இப்போது இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் எதை தேர்வு செய்வது நல்ல என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 549 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.549 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் ரூ.549 மற்றும் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டங்கள்! என்னென்ன நன்மைகள்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), சோஷியல் ஸ்வாக் (Social Swag) சந்தா, கான்ச்சா லங்கா (Kanccha Lanka) கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), ஃபேன் கோட் (Fan Code),ஈராஸ் நவ் (Eros Now), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹோய்சோய் (HoiChoi) ஆகிய ஆப்களை பயன்படுத்த முடியும்.

இதுதவிர ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) போன்ற ஆப்களையும் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்ஸ் கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட்திட்டத்தில் கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 598 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.598 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜீ5 (ZEE5) பிரீமியம் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. நிறுவனத்தின் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

மேலும் தினமும் 100எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும்.

எது சிறந்தது? அதிக டேட்டா தேவைப்படும் பயனர்கள் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் அதிக ஓடிடி நன்மையை விரும்பும் பயனர்கள் ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இரண்டு திட்டங்களும் கிட்டத்தட்ட அதிக சலுகைகளை வழங்குகின்ற என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 549 Plan Vs Rs 598 Plan With Unlimited Voice Calls 28 days validity Check Best Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X