வெறும் ரூ.548 முதல்.. 84 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 3GB டேட்டா, வாய்ஸ் கால்கள், அள்ளி தரும் Airtel திட்டங்கள்
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது ஏர்டெல் வழங்கும் ரூ.548, ரூ.549, ரூ.579, ரூ.589 ஆகிய திட்டங்களின் நன்மைகள், வேலிடிட்டி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 548 prepaid plan) ஆனது மொத்தமாக 7ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த ஏர்டெல் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 900 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 549 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.549 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் ( (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்.
அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகள் வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 579 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 589 prepaid plan) ஆனது மொத்தமாக 50ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 300எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








