Airtel போட்ட போடு.. இனிமே மாதம் ரூ.182 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 7 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தில் லம்ப்-சம் டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் (Yearly Plan) அல்லது மாதாந்திர திட்டம் (Monthly Plan) மட்டுமே கிடைக்கிறது என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், மூன்று மாத வேலிடிட்டி (3 Months Validity) கொண்ட திட்டமும் இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இதேபோல லம்ப்-சம் டேட்டா (Lupm-sum) இல்லாமல் மேலும், அடிமட்ட விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டமும் (Voice Only Plan) கிடைக்கிறது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் (Airtel Prepaid Plan) முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 548 திட்ட விவரங்கள் (Airtel Rs 548 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 7 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகையை கொடுக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்படும்பட்சத்தில் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இதேபோல 900 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையில் வருகிறது.

இந்த எஸ்எம்எஸ்களுக்கு பிறகு கட்டணங்கள் இருக்கும். வாய்ஸ் கால்களை பார்க்கையில், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷ்னல் ரோமிங் கால்களை (National Roaming Calls) பெற்று கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, 28 நாட்களுக்கு வெறும் ரூ.182 மட்டுமே கஸ்டமர்களுக்கு செலவாகிறது.
இந்த சலுகைகள் மட்டுமா கிடைக்கிறது என்றால், அதுதான் கிடையாது. கூடுதல் சலுகைகள் இருக்கிறது. இது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு பிரத்யேமாக கிடைக்கும் சலுகைகளாகும். ஆகவே, மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் கொடுக்கப்படுகிறது. மாதத்துக்கு ஒன்று என்னும் கணக்கில் ப்ரீ ஹலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகை வருகிறது.
இதுபோக கட்டணங்கள் ஏதும் இல்லாமல், ஸ்பேம் கால்கள் (Spam Calls) மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் (Spam SMS) ஆகியவற்றை டிடெக்ட் செய்து கொள்ளும்படியான ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகையும் வருகிறது. மூன்று மாத வேலிடிட்டியில் லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைப்பதால், இதைவிட மலிவான விலைக்கு சலுகைகளை பெற்று கொள்ள முடியாது.
ஏர்டெல் ரூ 469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): ஒருவேளை ஏர்டெல் கஸ்டமர்களுக்கு லம்ப்-சம் டேட்டா வேண்டாம். இதே வேலிடிட்டியில் வாய்ஸ் ஒன்லி திட்டம் இருந்தால் போதும் என்றால், அவர்களுக்கு இந்த ரூ 469 விலையிலான ப்ரீபெய்ட் திட்டம் சரியான தேர்வாக இருக்கும். ஏனென்றால், இதில் அடிமட்ட விலைக்கு சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது.
இந்த திட்டத்துக்கு டேட்டா மட்டும் கிடைக்காது. ஆனால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் கூடுதல் சலுகைகளானது முந்தைய திட்டத்தை போலவே இருக்கும். அதுவும் அதைவிட மலிவான விலைக்கு கிடைக்கும். அதாவது, இந்த ஏர்டெல் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகைகள் கிடைக்கிறது.
அதேபோல 900 எஸ்எம்எஸ்களை லம்ப்-சம் சலுகையில் பெற முடிகிறது. இதுபோக முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப் மற்றும் ப்ரீ ஹலோடியூன்ஸ் கிடைக்கிறது. மேலும், ஸ்பேம் அலெர்ட் மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை தெரிந்து கொள்ளலாம். இதில் உங்களது தேவைக்கு ஏற்ப இருக்கும் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








