Home
News

Airtel சிம் இருக்கா? அடுத்த 84 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்.. இதை மட்டும் பண்ணுங்க?

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவைகளின் அடிப்படையில் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி டேட்டா மற்றும் தினசரி டேட்டா இல்லாத திட்டங்களையும் கொடுக்கிறது. இப்படி கிடைக்கும் ஏர்டெல் ரூ.548 மற்றும் ரூ.899 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களின் முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.

ஏர்டெல் ரூ.548 திட்ட விவரங்கள்
ஏர்டெல் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் அதிக டேட்டா தேவைப்படாத, ஆனால் நீண்ட வேலிடிட்டி மற்றும் கூடுதல் சலுகைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகும். இந்த திட்டத்தில் வேலிடிட்டி காலம் முழுமைக்கும் மொத்தமாக 7 ஜிபி டேட்டா மட்டுமே லம்ப்-சம் (Lump-sum) முறையில் வழங்கப்படும்.

Airtel சிம் இருக்கா? அடுத்த 84 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

இந்த 7 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு போஸ்ட் டேட்டா சலுகை கிடையாது என்பதால், இணையத்தை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தனியாக டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அதேபோல், எஸ்எம்எஸ் சலுகையும் மொத்தமாகவே வழங்கப்படுகிறது. இந்த 84 நாட்களுக்கும் சேர்த்து 900 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும்.

இந்த இலவச எஸ்எம்எஸ்கள் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தியே மெசேஜ்களை அனுப்ப முடியும். வாய்ஸ் கால்களை பொறுத்தவரை, நாடு முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) இலவசமாகப் பேசிக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் மிகவும் லாபகரமாக கிடைக்கின்றன.

இதில் மொத்தம் 4 கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக, தனியாக சந்தா எடுத்தால் ரூ.4,000 செலவிட வேண்டிய அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா, இந்த திட்டத்தில் 12 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதுதவிர, தேவையில்லாத கால்கள் மற்றும் மெசேஜ்களை தவிர்க்க உதவும் லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகையும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.899 திட்ட விவரங்கள்
தினசரி டேட்டா மற்றும் வழக்கமான நன்மைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியும் 84 நாட்கள் ஆகும். ஆனால், இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வீதம், ஒட்டுமொத்த வேலிடிட்டி காலத்திற்கும் சேர்த்து மொத்தம் 126 ஜிபி அதிவேக டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, தினசரி நிர்ணயிக்கப்பட்ட 1.5 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகும் இணைய சேவை துண்டிக்கப்படாது இணைய வேகம் 64 கேபிபிஎஸ் (64 Kbps) ஆகக் குறைந்து தொடர்ந்து இயங்கும். இந்த ரூ.899 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) தடையின்றி வழங்கப்படுகின்றன.

மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 84 நாட்களுக்கும் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். இவற்றுடன் வாடிக்கையாளர்களின் விருப்பமான இலவச ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) போன்ற சலுகைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும், கூடுதல் சலுகைகளை விரும்பும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது.

இந்த திட்டத்தில் எந்தவிதமான ஓடிடி (OTT) சந்தாக்களோ அல்லது பிரீமியம் நன்மைகளோ கிடைக்காது. குறைந்த டேட்டா மற்றும் விலையுடன் 84 நாட்கள் வேலிடிட்டி வேண்டுபவர்கள் ரூ.548 திட்டத்தையும், தினசரி அதிக டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டி வேண்டுபவர்கள் ரூ.899 திட்டத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 548 Plan With 7GB Data Vs Airtel Rs 899 Plan With 1.5 GB Data Per Day For 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X