Home
News

ஏர்டெல் போட்ட போடு.. மாதம் ரூ.239 போதும்.. 56 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 84 ஜிபி டேட்டா!

ஏர்டெல் நிறுவனம், டேட்டா சலுகையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய ப்ரீபெய் திட்டங்களை களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டங்களோடு தினசரி டேட்டாவை கொடுக்கும் மற்றொரு திட்டத்தின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ 509 திட்ட விவரங்கள் (Airtel Rs 509 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மொத்தமாக 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

மாதம் ரூ.239 போதும்.. 56 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஆகவே, ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் கிடைக்கிறது. இருப்பினும், இந்த டேட்டாவை வேலிடிட்டி நாட்களில் எப்போது வேண்டுமானாலும் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு டேட்டாவுக்கு மட்டும் 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். ஆனால், மற்ற சலுகைகளை வேலிடிட்டி காலம் முடியும் வரையில் பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம். அதேபோல மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இது போக ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சப்ஸ்கிரிப்ஷன் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல ப்ரீ ஹலோடியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆப்களை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கு 1 மாதம் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த திட்டத்திலும் லம்ப்-சம் டேட்டா சலுகையே கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு மொத்தமாக 50 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் நளொன்றுக்கு 1.66 ஜிபி வீதம் டேட்டா கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தை போலவே, 300 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அப்பல்லோ 24|7 சர்கிள் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

மேலும், ப்ரீ ஹலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. தினசரி டேட்டா அல்லாமல், மொத்த டேட்டா தேவை இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 திட்டங்களும் பொருத்தமாக இருக்கும். ஒருவேளை இதே பட்ஜெட்டில் தினசரி டேட்டா வேண்டுமானால், ரூ 479 திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

ஏர்டெல் ரூ 479 திட்ட விவரங்கள் (Airtel Rs 479 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 84 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 1.5 ஜிபியை முழுவதும் பயன்படுத்திவிட்டால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை, அப்பல்லோ 24|7 சர்கிள் சப்ஸ்கிரிப்ஷன், ப்ரீ ஹலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 509 Plan With One Month Validity, 60GB Data, Unlimited Voice Calls Check Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X