Home
News

ஏர்டெல் கஸ்டமர்களே.. வெறும் ரூ.509 போதும்.. லம்ப்சம் டேட்டா.. டெய்லி லிமிட் கிடையாது.. அன்லிமிடெட் வாய்ஸ் வேற!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு தினசரி லிமிட் அல்லாமல் மொத்தமாக டேட்டா தேவைப்படும்பட்சத்தில் ரூ.509 மற்றும் ரூ.489 விலையில் கிடைக்கும் லம்ப்சம் டேட்டா (Lumpsum Data) திட்டங்களை தேர்வு செய்யலாம். இதில் டேட்டா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஆன்லைன் கேமிங் மற்றும் ஓடிடி வருகைக்குப் பின் தினசரி டேட்டாவின் அளவு வாடிக்கையாளர்களுக்கு போதுமாதனாக இருப்பதில்லை. இதனால், கூடுதலாக செலவு செய்து அதிக டேட்டா கொண்ட ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா திட்டங்களுக்கு அதிரடி சலுகைகளை கொடுக்க தொடங்கிவிட்டன.

வெறும் ரூ.509 போதும்.. லம்ப்சம் டேட்டா.. டெய்லி லிமிட் கிடையாது!

அந்த வரிசையில், லம்ப்சம் டேட்டா (Lumpsum Data) திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன. அதாவது, தினசரி லிமிட் அல்லாமல் திட்டத்தின் பணத்துக்கு ஏற்ற டேட்டாவை மொத்தமாக கொடுப்பதே லம்ப்சம் டேட்டா திட்டமாகும். இந்த சலுகையுடன் ஏர்டெல்லில் 2 திட்டங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், மற்ற சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ 509 திட்ட விவரங்கள் (Airtel Rs 509 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா (Data), அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் (Unlimited Local STD & Roaming Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகள் வழங்கப்படுகிறது. அதோடு பல்வேறு கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் சலுகைகள் பின்வருமாறு.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 60 ஜிபி டேட்டா மொத்தமாக வழங்கப்பட்டுவிடும். இதற்கு தினசரி லிமிட் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு டேட்டாவை வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு அன்லிமிடெல் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை வழங்கப்படுகிறது. ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு மூன்று மாதத்துக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் வின்க் மீயூசிக் ப்ரீ (Wynk Music Free) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாகும். வொர்க் ஃப்ரம் ஹோம் கஸ்டமர்கள் அல்லது ஓடிடி பிரியர்களுக்கு இந்த திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இதைவிட கம்மியான விலையில் மற்றொரு மொத்த டேட்டா திட்டம் இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 50 ஜிபி டேட்டா வழங்கப்படும். அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்துகொள்ள முடியும். இதில் ரோமிங் கால்களும் அடங்கும்.

மேலும், 300 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் சப்ஸ்கிரிப்ஷன், ப்ரீ ஹாலோடியூன்ஸ் மற்றும் வின்க் மீயூசிக் ப்ரீ சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுக்கு மேல் அனுப்பினால், லோக்கலுக்கு 1 ரூபாயும், எஸ்டிடிக்கு 1.5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல மொத்த டேட்டாவையும் பயன்படுத்திவிட்டால், ஃபேர் யூசேஜ் பாலிசி முறையில் டேட்டா கொடுக்கப்படாது. ஒரு எம்பிக்கு 50 பைசா வீதம் வசூலிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 509 Plan With 60GB Data, 30 Days Validity, Unlimited Voice Calling And 5G Data Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X