இறங்கி அடித்த ஏர்டெல்.. வெறும் ரூ 499 போதும்.. 3GB டேட்டா.. OTT சப்ஸ்கிரிப்ஷன்.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஏர்டெல் கஸ்டமர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக வெறும் ரூ 499 விலை கொண்ட திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், மூன்று மாதத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அன்லிமிடெட் 5ஜி சேவை வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ 179 திட்ட விவரங்கள் (Airtel Rs 179 Plan Details): ஏர்டெல்லில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் மிகவும் மலிவான விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுவொரு லம்ப்-சம் டேட்டா சலுகையாகும்.

ஆகவே, 2 ஜிபிக்கு பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்துகொள்ளலாம். மொத்தமாக 300 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. ப்ரீ ஹாலோ டியூன்ஸ் (Free HelloTunes), விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ 265 திட்ட விவரங்கள் (Airtel Rs 265 Plan Details): இந்த திட்டத்தில் தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜிபி வீதம் மொத்தமாக 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
இந்த 1 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்துகொள்ள முடியும். ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளை பெற்றுகொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 299 திட்ட விவரங்கள் (Airtel Rs 299 Plan Details): இந்த திட்டம் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் மெடி சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் 56 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

இந்த 2 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ளலாம். 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் கிடைக்கிறது. ப்ரீ ஹாலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ரூ 399 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 84 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.
அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மேலும், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் 20 ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): ஏர்டெல்லில் 28 நாட்கள் வேலிடிட்டியில் இந்த திட்டத்தில் மட்டுமே அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம். அதோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








