Home
News

ஏர்டெல் யூசர்களுக்கு வாழ்வுதான்.. ரூ.499 போதும்.. மூன்று ஓடிடி சந்தா.. அன்லிமிடெட் கால்கள்.. 75ஜிபி டேட்டா!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு வாழ்வுதான் என்று சொல்லும்படி வெறும் ரூ 499 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 75 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஓடிடி தளங்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், 200 ஜிபிக்கான ரோலோவர் மற்றும் 3 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ஓடிடிகளுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.

ஏர்டெல் யூசர்களுக்கு வாழ்வுதான்.. ரூ.499 போதும்.. மூன்று ஓடிடி சந்தா!

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை கிடைக்கிறது. 200 ஜிபிக்கான ரோலோவர் சலுகையுடன் 75 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

இதுபோக ஓடிடி சலுகையில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. அதாவது, எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், 6 மாதங்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. அதேபோல 1 வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா கிடைக்கிறது.

மேலும், 3 மாதங்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா கிடைக்கிறது. இந்த சலுகையின் கீழ் சோனிலிவ் (SonyLIV), ஈராஸ் நவ் (ErosNow), லயன்ஸ்கேட் பிளே (LionGatesPlay) போன்ற 20+ ஓடிடி ஆப்களின் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கும் எந்தவித கட்டணமும் கிடையாது.

இதுபோக ஃபேமிலி சிம் கனெக்சன் சலுகையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சிம் கார்டு ஆக்டிவேனுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கூடுதல் சிம் கார்டுக்கு அன்லிமிடெல் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் வழங்கப்படும்.

அதேபோல 30 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்படும். இப்படி ஏராளமான சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ 499 திட்டத்தில் கிடைக்கிறது. இதைவிட கம்மியான விலையில் போஸ்ட்பெய்ட் திட்டம் வேண்டுமானால், ரூ 399 விலையில் கிடைக்கும் திட்டத்தை ஏர்டெல் கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்திலும் முந்தைய திட்டத்தை போலவே வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா மட்டுமல்லாமல் ஓடிடி சலுகையும் இருக்கிறது. ஆனால், முன்னணி ஓடிடி ஆப்களை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், 20+ ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளையும் இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 399 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 40 ஜிபி டேட்டா மற்றும் 200 ஜிபிக்கான ரோலோவர் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ள முடியும்.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் ஃபேமிலி சிம் கனெக்சன் சலுகை கிடைக்கிறது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் ஓடிடி சலுகைகளை பார்க்கையில், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாவை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும் மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 499 Plan Offers Unlimited Calls, 75GB Data, One Year Hotstar Mobile Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X