மீண்டும் ஏர்டெல் காலம்.. வெறும் ரூ.499 போதும்.. அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 10+ ஓடிடி சந்தா!
ஜியோ நிறுவனத்தைப் போலவே கம்மியான விலையில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனும் ஏர்டெல்லின் ரூ.499 திட்டத்தில் (Airtel Rs 499 Plan) வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி எத்தனை நாட்கள்? இன்டர்நெட் வேகம் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
இந்திய மக்களின் பட்ஜெட் விலைக்கு ஏற்ப ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ப்ரீப்பெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில், ஜியோ நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.

ஆனால், இப்போது ஜியோ நிறுவனமே மூக்கில் விரல் வைக்கும்படியான சலுகைகளை ஏர்டெல் வழங்க தொடங்கி இருக்கிறது. வெறும் ரூ.499 விலையுள்ள திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட், இலவச லேண்ட்லைன் வாய்ஸ் கால்கள், 10 + ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்ட சலுகைகளை கொடுக்கிறது.
ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): இந்த திட்டம் ஓடிடி பிரியர்களுக்காகவே பிரத்யேகமாக குறைந்த விலையில் சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் கிடைக்கும். அதிகபட்சமாக 3.3 டிபி டேட்டா ஒதுக்கப்படும்.
அந்த வகையில், ஒரு நாளைக்கு 100 ஜிபிக்கும் மேல் டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு லேண்ட்லைன் கனெக்ஷன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் (Airtel Xstream Premium) ஓடிடி பேக் (OTT Pack) சலுகை கிடைக்கிறது.
இதன் மூலம், நீங்கள் ஈராஸ்நவ் (ErosNow), சோனிலிவ் (SonyLiv), ஹோய்சோய் (HoiChoi), ஷீமரூமீ (SheemarooMe), லயன்ஸ்கேட் பிளே (LionsgatePlay), அல்ட்ரா எபிகான் ( Ultra Epicon) மற்றும் மனோரமா மேக்ஸ் (manoramaMAX) ஆகிய ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், டிவோ (Divo), டோலிவுட் (Dollywood), நம்பிளிக்ஸ் (Namaflix), கிளிக் (Klikk), டாகுபோ (Docubay), ஹங்கமா பிளே (HungamaPlay), ஷார்ட்ஸ்டிவி (ShortsTV), சோஷியல்ஸ்வாக் (SocialSwag), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV) மற்றும் சௌபால் (Chaupal) ஆகிய தளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஓடிடி சலுகைகள் போக உங்களுக்கு விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கொடுக்கப்படும். இந்த திட்டத்தை ஓரே நேரத்தில் இன்டர்நெட், வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடிக்கு பயன்படுத்தும்போது, சற்று வேகம் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க வேண்டுமென்றால், நீங்கள் ஏர்டெல்லின் ரூ. 799 திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 799 திட்ட விவரங்கள் (Airtel Rs 799 Plan Details): இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் இன்டர்நெட் வேகம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைப்பதால், வாய்ஸ் கால், இன்டர்நெட் மற்றும் ஓடிடி தளங்களை அதிவேகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதோடு ரூ 499 பிளானில் கொடுக்கப்பட்ட ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் ஓடிடி சலுகைகளும் இதில் கிடைக்கிறது. மேலும், விங்க் மியூசிக் சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு பேசிக் லெவல் திட்டங்களுக்கும், 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
மலிவான விலையில் இன்டர்நெட், லேண்ட்லைன் கால் மற்றும் ஓடிடி சலுகைகளை பெற வேண்டும் என்றால், இந்த திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும். ஒருவேளை உங்களது பட்ஜெட் அதிகமாக இருந்தால், ரூ.999 திட்டத்தை தேர்வு செய்யுங்கள். அதில் இந்த அனைத்து சலுகைகளுடன் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்கிரிப்ஷன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








