Home
News

இறங்கி அடித்த ஏர்டெல்.. இனி 77 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா.. ரூ.489-க்கு இறக்கியாச்சு!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு அதிக வேலிடிட்டியுடன் அடிமட்ட விலைக்கு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) வேண்டுமானால், இந்த 2 திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். 77 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுக்கின்றன. ரூ.500 விலைக்குள் கிடைக்கும் இந்த திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாய்ஸ் கால்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், லம்ப்-சம் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 6 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவானது, 77 நாட்கள் வேலிடிட்டி முழுவதுக்கும் பொருந்தும். ஆகவே, முன்கூட்டியே பயன்படுத்திவிட்டால் அவ்வளவுதான்.

இறங்கி அடித்த ஏர்டெல்.. இனி 77 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

அதற்கு பிறகு டேட்டாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், 77 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) ஏர்டெல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். டேட்டாவை போலவே 600 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதையும் முழுவதும் பயன்படுத்திவிட்டால், கட்டணம் இருக்கும்.

இந்த சலுகை மட்டும்தான் இருக்கிறதா? என்று கேட்டால், அதுதான் இல்லை. கூடுதலாக அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) மெம்பர்ஷிப் கிடைக்கிறது. ஆனால், இந்த மெம்பர்ஷிப் 3 மாதங்களுக்கு கிடைக்கும். இது திட்டத்தின் வேலிடிட்டியைவிட அதிகமாகும். மேலும், ப்ரீ ஹலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகையும் கிடைக்கிறது. இதற்கு அடுத்து ஸ்பேம் அலெர்ட் (Spam Alert) சலுகையும் கிடைக்கிறது.

ஆகவே, எந்தவித கட்டணமும் இல்லாமல், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு வரும் ஸ்பேம் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை தெரிந்து கொள்ளலாம். இதைவிட மலிவான விலையிலும் அதிக வேலிடிட்டியிலும் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ரூ 469 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால், இதில் டேட்டா சலுகை கிடையாது. வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முந்தைய திட்டத்தைவிட கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது, அதில் 77 நாட்கள் வேலிடிட்டி கிடைத்து. ஆனால், இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு ஏற்ப டேட்டா சலுகை நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

அதேபோல ஏர்டெல் கஸ்டமர்களுக்கு 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இதுவொரு வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட திட்டமாக இருந்தாலும், ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும், சில சலுகைகள் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, முந்தைய திட்டத்தில் கிடைத்த அப்பல்லோ 24|7 சர்கிள் மெம்பர்ஷிப் கிடைக்கிறது. இதை மூன்று மாதங்களுக்கு அனுகலாம். அதேபோல ப்ரீ ஹலோடியூன்ஸ் உள்ளது.

இதுபோக ஸ்பேம் வாய்ஸ் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் கொடுக்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களும் அதிக வேலிடிட்டியை கம்மியான விலைக்கு கொடுக்கும் திட்டமாகும். 2 மாதங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு கம்மியான விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் அடங்கிய திட்டம் வேண்டுமானால், இந்த 2 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 489 Plan With Voice Calls 6GB Data 77 Days Validity Rs 469 Plan 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X