Home
News

ஒரே Airtel ரீசார்ஜ்.. 77 நாட்களுக்கு நோ டென்ஷன்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 ஜிபி டேட்டா.. ரூ.489-க்கு முடிஞ்சு!

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கஸ்டமர்கள் 2 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், இப்போது பார்க்கப் போகும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். லம்ப்-சம் டேட்டா சலுகையுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 489 வேல்யூ திட்டம் (Airtel Rs 489 Value Plan): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பே சொன்னது போல 77 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 2 மாதங்களுக்கு மேல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த வேலிடிட்டிக்கு விலை கம்மியாக இருக்கிறதே என்று கஸ்டமர்களுக்கு தேன்றலாம். உண்மைதான், இதுவொரு லம்ப்-சம் டேட்டா திட்டமாகும்.

ஒரே Airtel ரீசார்ஜ்.. 77 நாட்களுக்கு நோ டென்ஷன்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு இவ்வளவு டேட்டா என்ற சலுகை கிடைக்காது. 77 நாட்களுக்கும் மொத்தமாக சேர்த்தே 3 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகு வழக்கமான திட்டங்களில் கிடைப்பதை போல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை இதில் கிடைக்காது. ஆகவே, கட்டணம் இருக்கும்.

இதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் லம்ப்-சம் சலுகையில் வருகிறது. 77 நாட்களுக்கும் 600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் மட்டுமே லிமிட்டில் கிடைக்கின்றன. ஆனால், வாய்ஸ் கால்களில் அப்படி கிடையாது. இந்த 77 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது.

இந்த சலுகைகள் மட்டுமேதான என்றால் இல்லை. ஏர்டெல்லில் பிரத்யேகமாக கிடைக்கும் சில சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) சலுகையானது 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) மற்றும் ஸ்பேம் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் கிடைக்கிறது.

இதே வேலிடிட்டியில் தினசரி டேட்டா சலுகையுடன் திட்டம் வேண்டுமானால், ஏர்டெல்லில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது ரூ 799 விலைக்கு கிடைக்கிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) இந்த திட்டத்தில் கிடைக்காது. தினசரி டேட்டா மட்டுமே கூடுதலாக கிடைக்கும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 799 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 799 Prepaid Plan): இந்த திட்டத்துக்கும் 77 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆகவே, முந்தைய திட்டத்தைவிட அதிகப்படியான டேட்டா கிடைக்கிறது. ஆனால், விலை கிட்டத்தட்ட பாதிக்கு மேல் அதிகமாக இருக்கிறது.

எஸ்எம்எஸ் சலுகையும் தினசரிக்கு 100 என்னும் கணக்கில் கொடுக்கப்படுகிறது. மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது. இதில எந்த 77 நாட்கள் வேலிடிட்டி திட்டம் உங்களுக்கு சரியாக இருக்கும் என்பதை நீங்களே முடிவெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 489 Plan With Unlimited Voice Calls 77 Days Validity 6GB Data Check Value Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X