Home
News

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. 77 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 6 ஜிபி டேட்டா.. ரூ.489-க்கு வருது!

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு லம்ப்-சம் டேட்டா சலுகையுடன் அதிக வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல இருக்கின்றன. இதில் 77 நாட்கள் வேலிடிட்டியுடன் (77 Days Validity) கிடைக்கும் திட்டத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. இதேபோல வெறும் வாய்ஸ் கால்களுடன் (Voice Calls) மற்றொரு திட்டமும் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு அதிக டேட்டா சலுகைகள் கிடைக்காது. மொத்தமாகவே 6 ஜிபி டேட்டா (6GB Data) மட்டுமே கொடுக்கப்படும். அதே நேரத்தில் 6 ஜிபி டேட்டாவுக்கு பிறகு வழக்கமாக கிடைக்கும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படாது.

அறக்க பறக்கும் ரீசார்ஜ்.. 77 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த லம்ப்-சம் டேட்டாவை போலவே எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 600 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகியவை 77 நாட்களுக்கும் பொருந்தும். ஆனால், வாய்ஸ் கால்கள் சலுகை வழக்கம்போலவே அன்லிமிடெட்டாக கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

ஆகவே, ஏர்டெல் கஸ்டமர்கள் 77 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று சலுகைகள் மட்டுமல்லாமல், புதிதாக சேர்க்கப்பட்ட பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) இதில் கொடுக்கப்படுகிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 77 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவை 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ப்ரீ ஹலோடியூன்ஸ் சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. மேலும், ஸ்பேம் கால்கள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களுக்கு லைவ் அலெர்ட் சலுகையும் இதில் கிடைக்கிறது.

கொஞ்ச டேட்டா அதிக வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இந்த சலுகைளுக்கு ஏற்ப விலையும் மலிவாக இருக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு திட்டம் இருக்கிறது. இதில் டேட்டா சலுகை கொஞ்சமும் கிடைக்காது. இதனாலேயே விலை மலிவாக இருக்கிறது.

ஏர்டெல் ரூ 469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): முந்தைய திட்டத்துடன் ஒப்பிடுகையில் இது ரூ.20 விலை குறைவாக கிடைக்கிறது. அதே நேரத்தில் 7 நாட்கள் வேலிடிட்டி அதிகமாக கொடுக்கிறது. டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 84 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கிடைக்கும். ஆனால், 1 ஜிபி கூட டேட்டா கிடைக்காது. வெறும் வாய்ஸ் கால்கள் மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்கள் இதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் எஸ்எம்எஸ் சலுகையும் இருக்கிறது. மொத்தமாக 900 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது.

இது முந்தைய திட்டத்தைவிட அதிகமாகும். ஆனால், இந்த எஸ்எம்எஸ்களுக்கு பிறகு கூடுதலாக ஏதேனும் எஸ்எம்எஸ்கள் அனுப்பினால் கட்டணம் இருக்கும். மற்ற சலுகைகளை பார்க்கையில், முந்தைய திட்டத்தில் கிடைத்த ப்ரீ ஹலோடியூன்ஸ் சலுகையும், ஸ்பேம் வாய்ஸ் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

அதேபோல பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதிலும் 12 மாதங்களுக்கு சந்தா வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் விலைக்கு ஏற்ப சலுகைகள் கொடுக்கின்றன. வெறும் வாய்ஸ் கால்கள் போதுமானால், ரூ.469 திட்டத்தை தேர்ந்தெடுங்கள். கொஞ்சம் டேட்டா வேண்டுமானால், ரூ.489 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 489 Plan With Unlimited Voice Calls 6GB Data 77 Days Validity Vs Airtel Rs 469 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X