Airtel ராக்ஸ்.. Jio ஷாக்ஸ்.. OTT நன்மையுடன் ரூ.48 க்கு புதிய ஏர்டெல் திட்டம் அறிமுகம்!
இந்திய டெலிகாம் சந்தையில் உள்ள இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், அதன் பயனர்களுக்காக ரூ.48 க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். சுவாரசியமாக இந்த திட்டம் OTT (ஓவர்-தி-டாப்) நன்மையுடன் வருகிறது.
டெலிகாம்டால்க் வலைத்தளத்தின்படி - ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் பல சர்க்கிள்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஆக இது ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து வட்டாரங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கலாம். சரி வாருங்கள் ஏர்டெல்லின் புதிய ரூ.48 திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

பார்தி ஏர்டெல்லின் புதிய ரூ.48 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி: பார்தி ஏர்டெல்லின் புதிய ரூ.48 ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா மற்றும் ஓடிடி அணுகலுடன் வருகிறது. இது பயனர்களுக்கு எந்த சர்வீஸ் வேலிடிட்டியும் வழங்காது. இருப்பினும், இது ஒரு மாதத்திற்கான தனிப்பட்ட செல்லுபடியை கொண்டுள்ளது. ஆக ஓடிடி அணுகலும் 1 மாதத்திற்கு கிடைக்கும்
பார்தி ஏர்டெல்லின் புதிய ரூ.48 ப்ரீபெய்ட் திட்டத்தின்நன்மைகள்: இந்த திட்டத்தின் கீழ் ஏர்டெல் பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும். இதனுடன், ஒரு மாதத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் உள்ளது. ஆக இந்த திட்டத்தின் சிறப்பம்சமே ஜியோஹாட்ஸ்டார் அணுகல்தான். ஐபிஎல் 2026 கிரிக்கெட் போட்டிகளை பார்க்க விரும்பும் பயனர்கள் ஜியோஹாட்ஸ்டாரை அணுக விரும்புவார்கள் என்பதால்.. ரூ.48-ன் அறிமுகமானது சரியான நேரத்தில் வந்த ஒரு தரமான அறிமுகமாக பார்க்கப்படுகிறது.
பயனர்களுக்காக ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் ஏர்டெல்லின் ஒரே டேட்டா திட்டம் இதுவல்ல. ரூ.195, ரூ.279 மற்றும் ரூ.361 திட்டங்கள் உட்பட மற்ற திட்டங்களும் கூட அதே ஓடிடி நன்மை உடன் வருகின்றன. குறிப்பாக ரூ.279 திட்டத்துடன் நெட்பிளிக்ஸ் (Netflix) மற்றும் ஜீ5 (ZEE5) சந்தாக்களும் கிடைக்கிறது. இதுவும் கூட 1 மாத வேலிடிட்டியை கொண்டுள்ளது.
இதேபோல ஏர்டெல்லின் இந்த டேட்டா பேக் + இலவச ஓடிடி காம்பினேஷனில் மொத்தம் 4 திட்டங்கள் உள்ளன. அதில் ரூ.100 திட்டமும் அடங்கும். இது மொத்தம் 6 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். கூடுதலாக 1 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
முன்னரே குறிப்பிட்ட பார்தி ஏர்டெல்லின் ரூ.195 திட்டமானது மொத்தம் 12 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக 3 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, சோனிஎல்ஐவி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தாவின் ஒரு பகுதியாக 20 ஓடிடி-க்கள் ஆகிய நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
கடைசியாக பார்தி ஏர்டெல்லின் ரூ.361 திட்டமும் கூட டேட்டா உடன் சேர்த்து ஓடிடி நன்மையை வழங்குகிறது. இது மொத்தம் 50 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். கூடுதலாக 3 மாத காலத்திற்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








