இன்று ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் அறிவித்த புதிய திட்டங்கள் என்னென்ன? வாங்க பார்ப்போம்.!
ஏர்டெல் ரூ .47 ப்ரீபெய்டு திட்டம் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு தினசரி குறிப்பிட்ட நேரம் இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சலுகையை வழங்குகிறது.
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது,குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனங்கள் தற்சமயம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.47 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த திட்டத்தின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.47 திட்டம்:
ஏர்டெல் ரூ .47 ப்ரீபெய்டு திட்டம் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு தினசரி குறிப்பிட்ட நேரம் இலவச கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் போன்ற சலுகையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 50எஸ்எம்எஸ் மற்றும் 500எம்பி டேட்டா போன்ற சலுகைகளை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.99 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த ரூ.99 ப்ரீபெய்டு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் நண்மைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்:
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்சமயம் அறிவித்துள்ள சலுகைய என்னவென்றால் ரூ.75 ப்ரீபெய்டு திட்டத்தில் 10ஜிபி டேட்டாவை வழங்குகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும். மேலும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளை இந்த திட்டத்தில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த திட்டம், ரூ.29-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி வீதம் மொத்தமாக 14ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும்,பின்பு இந்த திட்டத்தை 7நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச எஸ்எம்எஸ் மற்றும் கால் அழைப்புகள் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படும். இந்த புதிய திட்டங்கள் தற்சமயம் மும்பை மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் மட்டும் கிடைக்கிறது விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications