Home
News

ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன நன்மைகள்.. இதோ முழு விவரம்..

ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக கம்மி பட்ஜெட்டில் அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யப் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டம் ஒன்றை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 469 prepaid plan) தான் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம்.. 84 நாட்கள் வேலிடிட்டி..

மேலும் 900 எஸ்எம்எஸ், ப்ரீ ஹலேடியூன்ஸ் (Free Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது. குறிப்பாக அழைப்பு நன்மைகள் மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி மட்டுமே விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை 84 நாட்கள் வேலிடிட்டி உடன் டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.979 மற்றும் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படும். இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம்.. 84 நாட்கள் வேலிடிட்டி..

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், rewards mini subscription, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.469 prepaid plan offers 84 days validity and unlimited benefits: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X