Home
News

ஜியோ போட்ட போடு.. இனிமே 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. ஏர்டெல் ரூ.21 அதிகம்.. இதுதான் விலை?

டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) உத்தரவின்படி வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் கொண்டுவந்தன. ஆனால், வழக்கம்போல ஜியோ நிறுவனம் கம்மி காசில் கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ரூ.21 விலை குறைவாக கொடுக்கிறது. ஆனால், சலுகைகள் எப்படி என்பதை பாருங்கள்.

ஏர்டெல் ரூ 469 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 469 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, வாய்ஸ் கால்கள் (Voice Calls) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் 900 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.

இந்த 900 எஸ்எம்எஸ்களை வேலிடிட்டி முன்பே முழுவதும் பயன்படுத்திவிட்டால், கூடுதலாக அனுப்பும் எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சலுகைகள் மட்டும்தான் இருக்கிறாதா? என்று கேட்டால், இல்லை. கூடுதலாக மூன்று சலுகைகள் இருக்கின்றன. இவை ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும் சலுகைகளாகும். அவை என்னென்ன?

ஸ்பேம் கால்கள் அலெர்ட் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகை கிடைக்கிறது. அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் மூன்று மாதங்களுக்கு கிடைக்கிறது. அதேபோல ஹலோடியூன்ஸ் (Hellotunes) சலுகையும் மூன்று மாதங்களுக்கு கிடைக்கிறது. ஆனால், ஒரு மாதத்துக்கு ஒரு டியூன் மட்டுமே வைத்து கொள்ள முடியும். இப்போது ஜியோ திட்டத்தை பார்ப்போம்.

ஜியோ போட்ட போடு.. இனிமே 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ ரூ 448 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 448 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது முந்தைய திட்டத்தை போலவே வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. ஆனால், ரூ.21 விலை மலிவாக கிடைக்கிறது. இருப்பினும், அதேபோல 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது.

ஆனால், ஏர்டெல்லில் 900 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டது. இதில் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதுபோக கூடுதல் சலுகைகளும் இருக்கிறது. ஆகவே, ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆகிய சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கின்றன. மேற்கண்ட் ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகளை ஒப்பிட்டு பார்த்தால் ஜியோ முந்துகிறது.

ரூ.21 விலை மலிவாக கிடைத்தும், கூடுதல் எஸ்எம்எஸ் சலுகையை கொடுக்கிறது. ஆகவே, ஜியோ கஸ்டமர்களுக்கே மலிவான விலையில் மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொண்ட வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்கிறது என்பது தெரிகிறது. இதைவிட மலிவான விலையில் ஜியோவில் திட்டம் இருக்கிறதா? என்றால் லம்ப்-சம் டேட்டாவுடன் ஒரு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 189 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 189 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, வாய்ஸ் கால்கள் மட்டுமே அடங்கிய திட்டம் கிடையாது. லம்ப்-சம் டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை 28 நாட்களுக்கு செய்து கொள்ளலாம். ஜியோ டிவி, ஜியோ சினிமா ஆப்களும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 469 Plan With Unlimited Voice Calls 77 Days Validity 6GB Data Vs Jio Rs 448 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X